ஹோட்டலில் எண் 13 அறை அல்லது கட்டிடத்தில்13 வது மாடி பெயர் இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம்! காரணம்?.
நீங்கள் உலகின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது விதவிதமான ஹோட்டல்களில் தங்கியிருக்கக் கூடும். பல கட்டிடங்களுக்கும் சென்றிருக்கக் கூடும். அதில் நீங்கள் பல முறை, ஹோட்டலில் எண் 13 அறை அல்லது கட்டிடத்தில் 13 வது மாடி பெயர் இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம். மேலை நாடுகளில் 13 எண்ணை கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம் அதற்கான காரணம்?.
மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக எண்13 என்பது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் கடைசி விருந்து(LastSupper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை13 என கூறப்படுகிறது. மேலும் யேசு மரித்த நாள்13ம் தேதி வெள்ளிக்கிழமை என கூறப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்13 எண்ணை பார்த்தாலும், கேட்டாலும், மக்கள் அச்சத்தில் உறைந்து விடுகின்றனர்.இது ஒரு வகையான ஃபோபியா என மருத்துவர்கள் கூறுகின்றனர். எண்13 பற்றிய இந்த பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் உலகின் பல இடங்களில் குறிப்பாக மேலை நாடுகளில் அறை எண்13 அல்லது13 வது தளம் காணமுடியாது.12 வது மாடிக்குப் பிறகு நேரடியாக14 வது தளம் இருக்கும்.இந்தியாவிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில்13ம் எண்ணை காண முடியாது. அதே போல் பல பெரிய ஹோட்டல்கள் அல்லது கட்டிடங்கள் சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், 13வது மாடி, 13ம் எண் கொண்ட அறைகள் கட்டப்படுவதில்லை.
0
Leave a Reply