நடக்கும் ஒவ்வொரு இன்பத்திற்கும் ,துன்பத்திற்கும் காரணம் ?
மனிதனுடைய வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். அதற்கான காரணத்தை நாம் கண்டுபிடித்து விட்டோம் என்றால் பிரச்சனைகள் ஏற்படாது. காரணத்தை அறிவதுதான் மிக மிக முக்கியம் எங்கு தவறு நடந்தது? எதைத் தவிர விட்டோம் என சிந்தித்துப் பார்த்து அந்த காரணத்தை அறிந்து விட்டோம் என்றால் அதுவே நமக்கு வெற்றியை வழிவகுத்து தந்துவிடும். ஒரு குண்டூசியை நாம் தொலைத்து விட்டால் கூட, அதை தொலைத்ததற்கும் நமக்கு ஒரு காரணம் இருக்கும் அது எதனால் நம் தொலைத்தோம் என்று அந்த காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க இந்த ஒரு சம்பவம் ஒரு உதாரணமாக இருக்கும்.அமெரிக்காவில் இருக்கும் தன் அக்காவுக்கு பார்சல் அனுப்புவதற்காக தபால் நிலையம் போனான் ஒரு இளைஞன். பார்சலுக்கான தபால் கட்டணம் செலுத்தியபோது அவனுக்கு மீதி இரண்டு ரூபாய் சில்லறை தர வேண்டும். என்னிடம் சில்லறை இல்லை என்று சொல்லி இரண்டு ரெவின்யூ ஸ்டாம்புகளை கொடுத்தார் தபால் நிலைய ஊழியர். கடையில் சில்லறை இல்லை என்றால் சாக்லேட் தருவார்கள் அதையாவது சாப்பிடலாம். ஒன்றுக்கும் உதவாது ஸ்டாம்ப் தருகிறார்கள் என்று அவனுக்கு எரிச்சல் வந்தது.
தபால் ஊழியரை மனதுக்குள் திட்டியபடி அதை வாங்கி தன் பர்ஸில் வைத்தான். கொஞ்ச நாளில் அதை மறந்தே விட்டான். இந்த கால இளைஞர்கள் பலருக்கு தங்கள் பர்சை சுத்தம் செய்யும் வழக்கம் இல்லை அவனும் அப்படித்தான். ஆண்டுகள் கடந்தன.அவன் கல்லூரி படிப்பை முடித்து சான்றிதழ்களை வாங்க செல்லும் போது அவனிடம் செலுத்த வேண்டிய நிலுவைகள் ஏதும் இல்லை என்பதற்காக ஒரு சான்றிதழ் கேட்டார்கள். அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட வேண்டும் என்றார்கள்.
ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையின் ஓரமாக இருந்த அந்த கல்லூரிக்கு அருகில் தபால் நிலையம் எதுவும் இல்லை. பலரும் என்ன செய்வது? என்று தெரியாமல் திகைக்க இவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்து. தன் பர்ஸை திறந்து பார்த்தான் என்றோ வாங்கி வைத்த ஸ்டாம்பு அப்படியே புதிதாக இருந்தது. தனக்கு ஒன்று தன் நண்பனுக்கு ஒன்று என்று எடுத்து பயன்படுத்தினான்.
வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு விஷயத்திற்கும் அர்த்தமுள்ள காரணம் இருக்கும் என்பதை அன்று அவன் புரிந்து கொண்டான். இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா? நமக்கு நடக்கும் ஒவ்வொரு இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஏதாவது ஒரு காரணத்தை கடவுள் நமக்கு வைத்திருப்பார். அதன் மூலம் நல்லது செய்ய வைப்பார் அந்த காரணத்தை நாம் கண்டுபிடித்து நமக்கு வழி காட்டுவது நம்மை படைத்த இறைவன்தான்.
0
Leave a Reply