சருமம், தலை முடிக்கு இயற்கையான சாயம் தரும் வெங்காய தோல்
வெங்காயத் தோலில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட கலவைகள் காணப்படுகின்றன. எனவே வெங்காயத்தோலை சாறு எடுத்து பயன்படுத்துவது அல்லது இன்ஃப்யூஷன்ஸை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது சரும எரிச்சலில் இருந்து நிவாரணம் தரும். மேலும் சருமத்தில் ஏற்படும் சிவப்பை குறைக்கவும், காயங்கள் விரைவாக ஆறுவதை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
வெங்காய தோலில் இருந்து எடுக்கப்படும் சாறுகள் சில நேரங்களில் கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் வெங்காய சாற்றில் உள்ள கலவைகள் நம்முடைய மயிர்க்கால்களை வலுப்படுத்த, முடி உதிர்வை குறைத்து அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். சிலர் வெங்காயத்தோலில் தயாரிக்கப்பட்ட இன்ஃப்யூஷன்களை தலைமுடியை அலச உதவும் இயற்கை விஷயமாக பயன்படுத்துகின்றனர்.
வெங்காய தோல்களை துணிகள், முட்டைகள் அல்லது முடிக்கு வண்ணம் பூச ஒரு இயற்கையான சாயமாக பயன்படுத்தலாம். பொதுவாக வெங்காயத்தின் வெளிப்புற தோல்களில் பிக்மென்ட்ஸ் உள்ளன, இதனை எக்ஸ்ட்ராக்ட் செய்யும் போது மஞ்சள், ஆரஞ்சு, மற்றும் ரெட்டிஷ்-பிரவுன் போன்ற பல்வேறு ஷேட்ஸ்கள் கிடைக்கின்றன. இவை பிரித்தெடுக்கப்பட்டு சாயமாக பயன்படுத்தப்படுகின்றன..
0
Leave a Reply