25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 26, 2024

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் 2024-2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்,  (25.09.2024) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்தலைவர்/ விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி  அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA)  பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகளை செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வுகளை கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம், டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், நில ஆவணங்கள் கணினி மயமாக்குதல், தேசிய நெடுஞ்சாலை- மத்திய சாலைதிட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மதிய உணவு திட்டம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (PMAY(G)  தூய்மை பாரத இயக்கம் (கி) (SBM(G) ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னேற்றத் திட்டம்(PMAGY) பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PMGSY),    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்தார இயக்கம், தூய்மை பாரத இயக்கம்  - மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் (SBM) அம்ருத் திட்டம், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், இராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY),  பரம்பரக்கத் கிருஷி விகாஸ் யோஜனா (PMVY)  நீர்வடிப் பகுதிகளில் பருவநிலை பாதுகாப்புத் திட்டம், மண் வள அட்டை  இயக்கம், பிரதான் மந்திரி கிரிஷ் சஞ்சாயி யோஜனா இயக்கம், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் (PMKSY),  தேசிய விவசாய வளர்ச்சித் திட்டம் (NADP),  தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம்(e-NAM), தேசிய நலக் குழுமம், பிரதம மந்திரி கனிஜ் சேஷ்த்ரா கல்யாண் யோஜனா(PMKKY), மாவட்ட கனிம வள நிதி, தேசிய சமூக நலத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம், தேசிய செயற்கை முறை கரூவூட்டல் திட்டம், தேசிய கால்நடை இயக்கம், உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு  மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் நன்றாக உள்ளது எனவும், அதேபோன்று மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை அந்தந்த பள்ளி தலைமையாசிரிகள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டது.மேலும், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும் எனவும், பதிவு செய்துள்ள குழந்தைகள் தொடர்ச்சியாக அங்கான்வாடி வருவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும்,மாவட்ட திறன் பயிற்சி  அலுவலகம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, தனியார் நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கௌசல் விகாஷ் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வையும், முகாம்களையும் நடத்தி, அதிக நபர்கள் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும், தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும், மேற்கண்ட திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் என்னென்ன சிரமங்கள் உள்ளது என்பது குறித்தும், என்னென்ன திட்டங்களுக்கு நிதி வராமல் நிலுவையில் உள்ளது என்பது குறித்தும், புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் ஆகியவை குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து, சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நமது மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல  அனைவரின் ஒத்துழைப்பை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்.,இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உட்பட அனைத்து நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 26, 2024

செவலூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில்  (25.09.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்

Sep 26, 2024

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்

மாவட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 2710 பயனாளர்கள் கலந்து கொண்டனர், அதில் 1978 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஊராட்சி மன்ற  அலுவலகங்களில் முகாம்கள் நடைபெற இருக்கிறது.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 அன்று கஞ்சநாயக்கன்பட்டியிலும், 26.09.2024, 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய தினங்களில் பாளையம்பட்டியிலும், 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தினங்களில் பாலவநத்தத்திலும், 03.10.2024 மற்றும் 04.10.2024 ஆகிய தினங்களில் சூலக்கரையிலும், 05.10.2024 மற்றும் 07.10.2024 ஆகிய தினங்களில் குல்லூர்சந்தையிலும், 08.10.2024 அன்று புலியூரானிலும், 09.10.2024 அன்று கோவிலான்குளத்திலும், 10.10.2024 அன்று ஆத்திபட்டியிலும்,காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 அன்று முஷ்டக்குடிறிச்சியிலும், 26.09.2024 அன்று அரசகுலத்திலும், 27.09.2024 அன்று காட்டுகுத்தகை கரிசல்குளத்திலும், 28.09.2024 அன்று வரலொட்டியிலும், 30.09.2024 அன்று குரண்டியிலும், 01.10.2024 அன்று ஜோகில்பட்டியிலும், 03.10.2024 அன்று மேலகல்லங்குளத்திலும், 04.10.2024 அன்று வி.நாங்கூரிலும், 05.10.2024அன்று நந்திக்குண்டுவிலும், 07.10.2024 அன்று எஸ்.மறைக்குளத்திலும், 08.10.2024 அன்று மந்திரியோடையிலும், 09.10.2024 அன்று புளியம்பட்டியிலும்,10.10.2024 அன்று முடுக்கன்குளத்திலும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 அன்று ஆணைக்குளத்திலும், 26.09.2024 அன்று செம்மனேந்தலிலும், 27.09.2024 அன்று மானூரிலும், 28.09.2024 அன்று பிள்ளையார்குளத்திலும், 30.09.2024 அன்று எருமைக்குளத்திலும், 01.10.2024 அன்று கட்டனூரிலும், 03.10.2024 அன்று பனையூரிலும், 04.10.2024 அன்று அகத்தக்குளத்திலும், 05.10.2024 அன்று புல்வாய்க்கரையிலும், 07.10.2024 அன்று அத்திகுளத்திலும், 08.10.2024 அன்று செம்பொன்னேறுஞ்சிலும், 09.10.2024 அன்று இருஞ்சிறையிலும், 10.10.2024 அன்று இலுப்பையூரிலும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய தினங்களில் முகவூரிலும்,  27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய தினங்கள் சேத்தூரிலும், 30.09.2024, 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தினங்களில் அயன்கொல்லங்கொண்டானிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தினங்களில் அய்யனாபுரத்திலும், 07.10.2024 மற்றும் 08.10.2024 ஆகிய தினங்களில்  சொக்கநாதன்புத்தூரிலும், 09.10.2024 அன்று கிருஷ்ணாபுரத்திலும், 10.10.2024 அன்று சுந்தரநாச்சியார்புரத்திலும்,சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய தினங்களில் சத்திரப்பட்டியிலும், 27.09.2024 மற்றும்  28.09.2024 ஆகிய தினங்களில் முத்துராமலிங்கபுத்திலும், 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தினங்களில் என்.ஜி.ஓ.காலனியிலும், 03.10.2024 அன்று பந்துவார்பட்டியிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தினங்களில் சின்னக்காமன்பட்டியிலும், 07.10.2024 அன்று கோல்வார்பட்டியிலும், 08.10.2024அன்று கத்தாலம்பட்டியிலும், 09.10.2024 அன்று மணிப்பாறைப்பட்டியிலும், 10.10.2024 அன்று மேலமடையிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 மற்றும் 26.09.2024 ஆகிய தினங்கள்; நாரணாபுரத்திலும், 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய தினங்களில் மீனம்பட்டியிலும்,  30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தினங்களில் மாரனேரியிலும், 03.10.2024 அன்று அனுப்பன்குளத்திலும், 04.10.2024 அன்று கட்டளைப்பட்டியிலும், 05.10.2024 அன்று ஈஞ்சாரிலும், 07.10.2024 அன்று நடையனேரிலும், 08.10.2024 அன்று மேலஆமத்தூரிலும், 09.10.2024 அன்று துரைச்சாமிபுரத்திலும், 10.10.2024 அன்று பேராபட்டியிலும் நடைபெறவுள்ளது.மேலும், திருவில்லிபுத்தூர்  ஊராட்சி ஒன்றியத்தில்; 25.09.2024  மற்றும் 26.09.2024 ஆகிய தினங்களில் சிவந்திப்பட்டியிலும், 27.09.2024, 28.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய தினங்களில் மம்சாபுரத்திலும், 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தினங்கள்; மல்லியிலும், 04.10.2024 அன்று அச்சகுளத்திலும், 05.10.2024 மற்றும் 07.10.2024 ஆகிய தினங்களில் அத்திக்குளம் செங்குளத்திலும், 08.10.2024 அன்று இடையன்குளத்திலும், 09.10.2024 அன்று முள்ளிக்குளத்திலும், 10.10.2024 அயன்நாச்சியார் கோவிலிலும்,திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், 25.09.2024 அன்று ம.ரெட்டியபட்டியிலும், 26.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய தினங்களில் கல்லூரணியிலும், 28.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய தினங்களில் முத்துராமலிங்கபுரத்திலும், 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தினங்களில் பூலங்களிலும், 04.10.2024 அன்று சவாசபுரத்திலும், 05.10.2024 அன்று தொப்பலாக்கரையிலும், 07.10.2024 அன்று காளையார் கரிசல்குளத்திலும், 08.10.2024 அன்று  தமிழ்பாடியிலும், 09.10.2024 அன்று குலேசகரநல்லூரிலும் 10.10.2024 அன்று வேலாயுதபுரத்திலும்,வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 25.09.2024 முதல்; 28.09.2024 வரை ஏழாயிரம்பண்ணையிலும், 30.09.2024, 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தேதிகளில் வெம்பக்கோட்டையிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தேதிகளில் விஜயகரிசல்குளத்திலும், 07.10.2024 மற்றும் 08.10.2024 ஆகிய தேதிகளில் செவல்பட்டியிலும், 09.10.2024 அன்று விஜயரெங்கபுரத்திலும், 10.10.2024 அன்று ஆலங்குளத்திலும், விருதுநகர்  ஊராட்சி ஒன்றியத்தில், 25.09.2024 அன்று சத்திரரெட்டியபட்டியிலும், 26.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய தினங்கள் ரோசல்பட்டியிலும், 28.09.2024 மற்றும் 30.09.2024 ஆகிய தினங்களில் ஆவுடையாபுரத்திலும், 01.10.2024 மற்றும் 03.10.2024 ஆகிய தேதிகளில் தம்மநாயக்கன்பட்டியிலும், 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தேதிகளில் சிவஞானபுரத்திலும், 07.10.2024 மற்றும் 08.10.2024 ஆகிய தேதிகளில் காசிரெட்டியபட்டியிலும், 09.10.2024 அன்று வி.முத்துலிங்கபுரத்திலும், 10.10.2024 அன்று செங்குன்றாபுரத்திலும்,வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில், 25.09.2024 முதல் 27.09.2024 வரை கூமாப்பட்டியிலும், 28.09.2024, 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தேதிகளில் சுந்தரபாண்டியத்திலும், 03.10.2024, 04.10.2024 மற்றும் 05.10.2024 ஆகிய தேதிகளில் குன்னூரிலும், 07.10.2024 முதல் 09.10.2024 வரை மகாராஜபுரத்திலும், 10.10.2024 அன்று ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும் புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற உள்ளது.எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இம்முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு, காப்பீட்டு அட்டை பதிவு செய்து பயன்பெறுமாறும், இம்முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் 73730-04974-யை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 25, 2024

தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில்,  (24.09.2024) பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து நடத்திய தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் மரக்கன்றுகள் நட்டு  துவக்கி வைத்தார்.கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பநிலை என்பது இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்து வருகிறது.   இதற்கு முன்பாக இந்த தேதியில், இந்த மாதத்தில் அதிகமான வெப்பநிலை இதுவரை பதிவாகவில்லை. நாட்டிலேயே அதிகமான வெப்பநிலை நேற்றைய முந்தைய தினம் மதுரையில் இருந்தது.இதெல்லாம்  பருவநிலை  மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அதிகப்படியாக நகர்ப்புறமாக வளர்ச்சி அடையக்கூடிய மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகரப்புறங்களில் தான் வசிக்கிறார்கள்.  2030ல் இது  70 சதவிகிதமாக மாறி விடும் என்கிறார்கள்.  வரும் 2040-ல் ஏறத்தாழ 90 சதவீதமான மக்கள் நகர்ப்புற பகுதிகளில் தான் வசிப்பார்கள். அதனால் நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக்கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சினைகள் அதிகமாகும்.   நகரமயமாகும் போது அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது உடனடியாக இது  சுற்றுச்சூழலை பாதித்து பருவநிலை மாற்றத்தை உண்டாக்கும். எனவே நாம் வாழக்கூடிய பூமியில் இந்த பூமியை வாழ்வதற்கு ஏற்ப மாற்ற வேண்டுமானால், உரிய பசுமை பரப்பை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் 33 சதவீதம் பசுமை பரப்பு இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும். இது விருதுநகர் மாவட்டத்தில் 10 விழுக்காடுக்கும் குறைவாகவே இருக்கிறது.மரக்கன்றுகளை நடுதலை தினந்தோறும்  மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவர்கள் எந்த துறையில் பணிபுரிபவராக இருந்தாலும், அதை ஒட்டி நம்மால் முயன்ற அளவிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மரம் நடுதலை அதிகப்படியான எண்ணிக்கையில் மேற்கொள்ள வேண்டும். மரம் நடுவதோடு மட்டுமல்லாமல் அதை ஓராண்டுக்காவது பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Sep 25, 2024

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில் 2710 பயனாளர்கள் கலந்து கொண்டனர், அதில் 1978 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஊராட்சிகளின் ஊராட்சிமன்ற அலுவலகங்களில் முகாம் நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய 73730-04974- என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 25, 2024

இந்திய இரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பணியிடங்களுக்கு ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு

இந்திய இரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் அறிவிக்கப்பட்டுள்ள Non-Technical Popular Categories(NTPC) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித்தகுதிக்கு (3445 பணிக்காலியிடங்கள்) மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு (8113 பணிக்காலியிடங்கள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுக்கு முறையே 20.10.2024 மற்றும் 13.10.2024-ஆகிய தேதிக்குள் www.rrbchennai.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள ஆர்வலர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு 27.09.2024 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரியில் காலை 09.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இவ்வகுப்பில் திறன் வாய்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தேர்வு குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தேர்வு குறித்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் இந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லூரிக்கு நேரில் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். எனவே இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 25, 2024

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து (Travel Agency) விலைப்புள்ளிகள் பெற விண்ணப்பங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் TN-RIGHTS  மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்;டம் செயல்படுத்திட ஏதுவாக வாகன நிறுவனங்களிடமிருந்து (Travel Agency) விலைப்புள்ளிகள் பெறவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வாகன நிறுவனங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும். வாகனம், GSTபதிவு வாகன உரிமைபெற்ற ஓட்டுனர், எரிபொருள் செலவினம், வாகன பராமரிப்பு மற்றும் இதர தகுதியுடன் விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் 01.10.2024-க்குள் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.மேலும் விவரம் பெறுவதற்கு தொலைப்பேசி எண்.04562-252068 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 24, 2024

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை

விருதுநகர் தெப்பம் பஜாரில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்  (23.09.2024) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள்;, கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன்ஃபருத்தி (டுiநெn ஃ ஊழவவழn) சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும்; குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது.கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கோ - ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது.கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான றறற.உழழிவநஒ.உழஅ என்ற இணையதளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். விருதுநகர் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.40.26 இலட்சங்கள் ஆகும். தீபாவளி 2024 விற்பனை குறியீடாக ரூ.55.00 இலட்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரித்தார்.

Sep 24, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில்  (23.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் செய்த மனுதாரருக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சார்பில் தையல் இயந்திரத்தினை மாட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 05.10.2024 அன்று விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில்நெறிவழிகாட்டி) திருமதி பிரியதர்ஷினி, உதவி ஆணையர் (கலால்) திரு.கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 24, 2024

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (23.09.2024) துவக்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ /மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள்  மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 26 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு 8,106 பள்ளி மாணவர்களும், 5,499 கல்லூரி மாணவர்களும், 267 மாற்றுத்திறனாளிகளும், 706 அரசு அலுவலர்களும், 1724 பொதுமக்களும் என மொத்தம் 16,302 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அதன்படி,  இன்று  நடைபெற்ற  அரசு அலுவலர்களுக்கான  தடகள, கேரம் உள்ளிட்ட  விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.மாவட்ட அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவார்கள். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக பரிசுகள் வழங்கிட உள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமார மணிமாறன்,  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 74 75

AD's



More News