மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகிற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (25.07.2024) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகிற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விருப்பம் உள்ள நபர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படும்.
புதிய எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டால் அவர்களையும் தொடர் கண்காணிப்பு செய்து பராமரிக்கவும் இவ்வாகனம் பயன்படும்.
இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர்/ மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் மரு.யசோதாமணி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி, காசநோய் மற்றும் குடும்ப நலதுறையின் துணை இயக்குனர்கள் மாவட்ட திட்ட மேலாளர் திரு.வேலையா, மாவட்ட மேற்பார்வையாளர் திரு.அய்யனார் உட்பட அரசு அலுவலர் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply