டி.என்.பி.எல்.: திண்டுக்கல், திருப்பூர் அணிகள் அபார வெற்றி.
திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் நெல்லை மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நெல்லை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.
கடினமான இலக்கை துரத்திய திருப்பூர் அணி அதிரடியாக விளையாடி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.
0
Leave a Reply