புரோ கபடி லீக்12வது சீசன் தொடரில், சாம்பியன் ஆன, டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலை வாஸ், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன. நேற்று, டில்லியில் நடந்த பைனலில் புனே, டில்லி அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணியினர், புனே அணியை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் டில்லி அணி 20-14 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட புனே அணிக்கு 14 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் டில்லி அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2021-22, 2025) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.புரோ கபடி சாம்பியன் டில்லி அணிக்கு கோப்பையுடன், ரூ. 3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. புனே அணிக்கு ரூ.1.8 கோடி கிடைத்தது.
0
Leave a Reply