“சிரிப்பு “ நோய் தீர்க்கும் மருந்து.
அமெரிக்க சைக்கோ நியூரோ இம்யூனாலஜி துறை.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்றஎன்பது பழமொழியை உண்மை என்று சொல்லி இருக்கிறது . தன்னிச்சையான சிரிப்பு மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது ஆய்வுகள்.மன அழுத்தம் ஏற்படும் போது உடலின் தசைநார்கள் இறுக்கமான நிலையை அடையும். சிரிக்கும் போது தசை நார்கள் தளர்ந்து இலகுவாக மாறுகிறது. உடல் தளர்வாக இருக்கும் போது உடலில் ஒரு வித அமைதியான நிலை ஏற்படும். இதுவும் மன அழுத்தத் தைக் குறைக்க உதவும். நன்றாக மனம் விட்டு சிரிக்கும் போது 45 நிமிடங்கள் வரை மன அழுத்தம் குறைகிறது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிரிப்பு என்பது நகைச்சுவையாக இல்லாமல் தன்னை மறந்து தன்னிச்சையான சிரிப்பாக இருக்கும் போது தான் அது உண்மை யான சிரிப்பு என அழைக்கப்படுகிறது.பல்வேறு நாடுகளில் சிரிப்பு கிளப் என்ற குழுக்கள் தொடங்கப்பட்டு இயங்குகின்றன.பல மருத்துவமனைகளில் சிரிப்பு கிளப்புகள் நோயாளிகளுக்கு சிரிப்பை பிரதானமாக கொண்ட திரைப்படங்களை திரையிடுகின்றன. எந்த ஒரு சிக்கலையும் சிரிப்புடன் சந்தித்து சமாளித்து வருவதன் மூலம் நோயில்லாத வாழ்க்கையை பெற முக்கிய பங்கு வகிக்கும் சிரிப்பு.
0
Leave a Reply