'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா''இந்திய விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோ' உடன் இணைந்து, 'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது பூமியை அங்குலம் அங்குலமாக படம் பிடித்து, 12 நாட்களுக்கு ஒரு முறை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து ,இந்த செயற்கைக்கோளை ஜி.எஸ். எல்.வி., - எப் 16 ராக்கெட், நாளை மாலை 5:40 மணிக்கு ராக்கெட் எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம், எடையை 420.50 டன்சுமந்தபடிவிண்ணில்ஏவப்படுகிறது.இதற்கான,27 மணிநேரம் 30 நிமிடங்களுக்கான, 'கவுன்ட்டவுன்' இன்று மதியம் 2:25 மணிக்கு துவங்குகிறது.
0
Leave a Reply