25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


'கேலோ இந் தியா யூத்' 7வது சீசன் விளையாட்டு போட்டிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கேலோ இந் தியா யூத்' 7வது சீசன் விளையாட்டு போட்டிகள்.

'கேலோ இந் தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் பீஹாரில், நடக்கிறது. துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.

சைக்கிளிங் போட்டி.

சைக்கிளிங் போட்டியில் ராஜஸ்தானின் ஹர்ஷித்தா, 500 மீ., டைம் டிரையல் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு  நேற்று தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் தபிதாவுக்கு வெண்கலம் கிடைத்தது.7.5 கி.மீ., ஸ்கிராச் ரேஸ் பிரிவில் ஹர்ஷித்தா, 11 நிமிடம், 50.973 வினாடி நேரத்தில் வந்து தங்கத்தை  வசப்படுத்தினார்.

துப்பாக்கிசுடுதல்.

துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் மயங்க் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார்.

நீச்சல் போட்டி

கயாவில் நடந்த நீச்சல் போட்டியில் தெலுங்கானா வின் வர்ஷித் (400 மீ., தனி நபர் மெட்லே), சுஹாஸ் (100 மீ., பேக்ஸ்டிரோக்), ஸ்ரீ நித்யா (100 மீ., பேக்ஸ் டிரோக்) என மூவரும் தங்கம் கைப்பற்றினார்கள்.

  ஜூடோ போட்டி

ஜூடோ போட்டியில் திவ்யா (44 கிலோ), குஷ்பு (57 கிலோ) குஜராத் அணிக்கு முதல் இரு தங்கம் வென்று தந்தனர்.

நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி, 6 தங்கம், 2 வெள்ளி என 8 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. : கர்நாடக அணி (5 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) இரண்டாவதாக உள்ளது. மஹாராஷ்டிரா (5 தங்கம். 6 வெள்ளி, 9 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் உள்ளது. 

டென்னிஸ் 

இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 5 இடம் முன்னேறி, 33வது இடம் பிடித்துள்ளார். கடந்த வாரம் நடந்த மாட்ரிட் டென்னிசில் போபண்ணா ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற் றுக்கு தகுதி பெற்றதால், இந்த முன்னேற்றம் கிடைத்தது. டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.45 வயதான போபண்ணா, மீண்டும் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News