மறைந்த நடிகர் மயில்சாமியின் "ஆசை”யை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த்..
சில மாதங்களுக்கு முன்பு காமெடி நடிகர் மயில்சாமி நெஞ்சு வலி காரணமாக திடீரென்று உயிரிழந்தார்.அவருடைய திடீர் இறப்பு பலரையும் இப்ப வரைக்கும் பீல் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் அவர் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் செய்து முடித்து இருக்கிறார். மயில்சாமி காமெடி டைம் நிகழ்ச்சியும் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இந்த நிலையில் பல திரைப்படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.சில நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருப்பது போல மயில்சாமியும் அந்த காலத்திலேயே சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்திருந்தார்.
அந்த நேரத்தில் தான் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய 57 வது வயதில் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.நடிகர் மயில்சாமியின் இறப்பு செய்தி கேட்டு அவருடைய உறவினர்களை போலவே அவருடைய ரசிகர்களும் அக்கம் பக்கத்தினரும் திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வேதனைகளை தொடர்ந்து தெரிவித்து கொண்டு இருந்தனர். ஒரு சில பிரபலங்கள் தான் தாங்கள் வாழும் போதே பலருக்கும் உதவி செய்து மறைந்த பிறகு அந்த உதவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மயில்சாமியும் ஒருவர்.மயில்சாமியின் இறப்பிற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசை அதை சீக்கிரமாக நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார்.இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். தற்போது அந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒரு வழியாக பல மாதங்கள் கழித்து மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ரஜினிகாந்த் என்று கூறி வருகின்றனர்..
0
Leave a Reply