25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதன்முறையாக சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதன்முறையாக சாம்பியன்.

பாரீசில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் பிளவியா கோபோலியை (14-ம் நிலை வீரர்) எதிர்கொண்டார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றியதால் ஆட்டம் 5-வது செட் வரை நீடித்தது.

சுமார் 4 மணி 16 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில், ஸ்வெரேவ் 6-1, 4-6, 6-4, 6-7 (5-7), 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

2015 முதல் விளையாடி வரும் 29 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கைப்பற்றும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வெரேவுக்கு ரூ. 31 கோடியும்,இரண்டாம் இடம் பிடித்த கோபோலிக்கு ரூ. 15.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News