இந்தியா சார்பில் ஆஷிஸ் லிமாயே ஆசிய குதிரையேற்ற சாம்பியன் ஷிப் ,வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர்.
தாய்லாந்தில், ஆசிய குதிரையேற்ற சாம்பியன் ஷிப் தாய்லாந்தில், 'ஈவென்டிங்' தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க்கனுமுரி பங்கேற்றனர். இதில் 29.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஆஷிஸ் லிமாயே, தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆசிய குதிரையேற்ற சாம்பியன் ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் ஆஷிஸ் லிமாயே. 'ஈவென்டிங்' அணிகள் பிரிவில் ஆஷிஸ் லிமாயே, ஷஷாங்க் சிங் கடாரியா, ஷஷாங்க் கனுமுரி அடங்கிய இந்திய அணி, 121.8 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றனர். தாய்லாந்து அணி (117.6) தங்கத்தை கைப்பற்றியது.
ஒரு தங்கம், 4 வெள்ளி என, 5 பதக்கம், இம்முறை இந்தியாவுக்கு கிடைத்தது.
0
Leave a Reply