25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கோலாப்பூர் மகாலட்சுமி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோலாப்பூர் மகாலட்சுமி.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருக்கும் மகாலட்சுமியை தரிசித்தால் செழிப்பான வாழ்வு அமையும். இந்த அம்மனை வழிபடும் விதத்தில் ஆண்டுக்கு ஆறு நாள் கருவறையில் மகாலட்சுமி மீது சூரியன் கதிர்களைப் பரப்புகிறார்.

பிரளயகால வெள்ளத்தில் கடல் பொங்கி பூமி அழியத் தொடங்கியது.ஆனால் பூமியில் ஒரே ஒரு பகுதியை மட்டும் மகாலட்சுமி வலது கையை உயர்த்தி அழிவில் இருந்து காப்பாற்றினாள். அந்த இடம் 'கரவீர்' எனப்பட்டது. 'கர' என்றால் 'கை', 'வீர்' என்றால் 'வீரம்' என பொருள். வீரச்செயல் புரிந்ததால் 'வீரலட்சுமி' 'தைரிய லட்சுமி' என மகாலட்சுமி பெயர் பெற்றாள். இத்தலம் காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்க வேண்டும் என சிவனிடம் அகத்தியர் கோரிக்கை வைக்க அவரும் அருள்புரிந்தார். கோலாசுரன் என்ற அரக்கனை சிங்க வாகனத்தில் எழுந்தருளி மகாலட்சுமி வதம் செய்ததால் 'கோலாப்பூர்' எனப் பெயர் பெற்றது.

சக்தி பீடங்களில் இத்தலம் 'கரவீர பீடம்' எனப்படுகிறது. மராட்டியர் பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில், மகாதுவாரம் என்ற பிரதான மேற்கு வாசலில் அழகிய தீபத்துாண்கள் காண்போரை கவர்கின்றன. கருவறையில் ஆதிசேஷன் குடைபிடிக்க மகாலட்சுமி சதுர பீடத்தில் அமுதசுரபியை ஏந்தியபடி நிற்கிறாள் 1300 ஆண்டுகள் பழமை மிக்க இச்சிற்பம் அரிய கருரத்தினக் கல்லால் ஆனது.

சூரியன் இங்கு மகாலட்சுமியை வழிபடும் விதத்தில் ஆண்டின் ஆறு நாட்கள் மாலை நேரத்தில் கருவறையில் உள்ள ஜன்னல் வழியாக ஒளிக்கதிர்களை பரப்புகிறார். ஜன.31, நவ. 9 ல் மகாலட்மியின் திருவடியிலும், பிப். 1, நவ. 10ல் மார்பிலும், பிப்.2, நவ.11ல் திருமேனி முழுவதும் சூரியக்கதிர் படர்கிறது.

மலர்மாலைசாத்திஅம்மனை வழிபடுவோருக்கு செல்வம்பெருகும்.காளி, சரஸ்வதி,நவக்கிரகம், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதர், சீதை, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு சன்னதிகள் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News