25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா.

புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்காண சித்திரை திருவிழா கடந்த 21-ந் தேதி பூக்குழி திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் பல்வேறு அலங்காரத்துடன் சுவாமிஊர்வலம் நடைபெற்றது. 10-வது நாள் திருவிழாவான பூக்குழி திருவிழாநேற்று நடை பெற்றது. 

கோவிலில் பக்தர்கள் அழகு குத்துதல், அக்னி சட்டி முளைப்பாரி ஊர்வலம்சென்றனர். பின்னர் காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களைசெலுத்தினர்.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், இதையடுத்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பின்னர் அம்மன் சப்பரம் 

உலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  துணை போலீஸ் சூப்பிரண்டு பசினா பீவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News