25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


ஜெர்மனியில் இந்திய வீராங்கனைகளின் பதக்க வேட்டை: சேஜலுக்கு தங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெர்மனியில் இந்திய வீராங்கனைகளின் பதக்க வேட்டை: சேஜலுக்கு தங்கம்.

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஹிமான்சி (574), சேஜல் (573), வன்ஷிகா (572) ஆகியோர் முறையே 3, 4, 5-வது இடங்களைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட 18 வயதான சேஜல், 240.2 புள்ளிகள் குவித்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். மேலும், பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் பிராச்சி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தப் போட்டித் தொடரில் இதுவரை இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News