25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


காலிபிளவர் குருமா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காலிபிளவர் குருமா

 தேவையான பொருட்கள் : 300 கிராம் காலிபிளவர்,1 கைப்பிடி சின்ன வெங்காயம்,50 மில்லி எண்ணெய்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,  1 பத்தை தேங்காய்,2 தக்காளி, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி மல்லித் தூள்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் , 1/2 தேக்கரண்டி கரம் மசாலா,  தேவையானஅளவு உப்பு, தேவையானஅளவு தண்ணீர், கால் கப் கொத்தமல்லி இலைகள்.

செய்முறை :

காலிஃப்ளவரை சுத்தம் செய்து கொஞ்சம் சுடு தண்ணீர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து10 நிமிடம் ஊறவைக்கவும் இதனால் இதில் உள்ள சிறிய புழுக்கள் நீங்கி விடும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் கொஞ்சம் தண்ணீர் தெளித்து வதக்கவும்.

இதில் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து2 நிமிடம் சிறு தீயில் வதக்கிய பின் தேங்காய் மற்றும் தக்காளி அரைத்த விழுது மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்துக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

குக்கர் சூடு தணிந்த பின் குழம்பில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவும் சாதம் மற்றும் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News