25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கூட்டுறவுச் சங்கத் தேர்தல்,குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் வாக்களிக்கவோ, போட்டியிடவோ இயலாது மாவட்ட ஆட்சியர்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கூட்டுறவுச் சங்கத் தேர்தல்,குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் வாக்களிக்கவோ, போட்டியிடவோ இயலாது மாவட்ட ஆட்சியர் தகவல்.

விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்) அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள், தங்கள் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். 1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின்படி, சங்க உறுப்பினர்கள் நுழைவுப் புத்தகத்தில் உறுப்பினரின் பெயரின் கீழ் குடும்ப அட்டை எண் மற்றும் ஆதார் எண் பதியப்பட வேண்டும்.

இது தொடர்பாகச் சங்கச் செயலாளர் மற்றும் தலைவர் மூலம் ஏற்கனவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் நகல்களை வழங்காத உறுப்பினர்களுக்கு, இயற்கை நியதி கோட்பாடுகளின்படி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

 எனவே, கூட்டுறவுத் தேர்தல் விதி 52(7) (ந) (i)-ன் படி தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறுவதை உறுதிசெய்ய, உறுப்பினர்கள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணின் ஒளியச்சு (Xerox) நகல்களைச் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களைப் பதிவுத் தபாலிலோ அல்லது சங்க வேலை நேரங்களில் நேரிலோ வரும் 30.04.2026-க்குள் கிடைக்குமாறு வழங்க வேண்டும்.

 உறுப்பினர்கள் இந்த விவரங்களை வழங்கத் தவறும்பட்சத்தில், விதி 52(7) (ந)-ன் படி சங்க நிர்வாகக்குழு தேர்தலில் வாக்களிக்கவோ அல்லது வேட்பாளராகப் போட்டியிடவோ தகுதியை இழக்க நேரிடும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News