25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவுறுத்தலின்படி, வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நேர்மையான, கண்ணியமான தேர்தலை எதிர்கொள்ளவும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் SVEEP (Systematic Voter’s Education and Electoral Participation) செயல்பாடுகள் மூலம் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக,  (13.04.2026) 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வீரசோழன் ஊராட்சியில், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி ரங்கோலி, சிலம்பம் மற்றும் தீப்பொறி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

விழிப்புணர்வு:

  பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள்: தொடர்ந்து, “வாக்காளர் என்பதை உறுதி செய்வீர்” மற்றும் “என் வாக்கு விற்பனைக்கு அன்று” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் வீதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உறுதிமொழி:

 நிகழ்ச்சியின் நிறைவாக, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்பதை வலியுறுத்தி அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

 இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News