25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


“உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம்” துவக்க விழாவில் திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம்” துவக்க விழாவில் திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (29.05.2025)   வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில்  “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” -னை காணொளி காட்சி வாயிலாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் நடைபெற்ற “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டார்.

அனைத்து வட்டாரங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில்,  நான்கு முகாம்கள் வீதம் தமிழ்நாடு முழுவதும் 17,116 கிராமங்களில் முகாம்கள் நடைபெறும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைகளை கண்டறிதல், திட்ட உதவிகள் வழங்குதல், தொழில்நுட்பங்கள் வழங்குதல், கால்நடை நலன் காத்தல், வேளாண் உற்பத்தியை பெருக்குதல், உழவர்களின் வருமானத்தை அதிகரித்தல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் முகாம்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாணமைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து வயல் வழி பாதுகாப்பு, பரப்பு சாகுபடி, மகசூல் உள்ளிட்டவை குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள்.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் “உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்” முகாம்கள் நடைபெற்றது.திருவில்லிபுத்தூர் வட்டம் டி.மானகசேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கலந்து கொணடு, இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு குதிரைவாலி செயல்விளக்கத்திடல் இடுபொருட்கள், சிறுதானிய நுண்ணுட்ட உரம்,  மழைதூவுவான்,  தென்னங்கன்று விநியோகம், உயிர் உரம் விநியோகம், கால்நடைக்கான தாதுஉப்புகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.  

இக்முகாமில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு  புதிய தொழில்நுட்பங்கள், அரசு மானியத்திட்டங்கள், மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குதல், உயிர்ம வேளாண்மை சாகுபடி வழிகாட்டுதல், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள்,  இயந்திரங்கள், வேளாண் கருவிகள், மண்வள அட்டை, நுண்ணீர் பாசனத்திட்டம், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், வீட்டுக்காய்கறி தோட்டம், கால்நடைகள் பராமரிப்பு, பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன்கள்; குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனைக்குழு மற்றும் சார்புத்துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை விவசாயிகள் பார்வையிட்டனர்.இந்த புதிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாம்கள்; மூலம் உழவர்களுக்கு வேளாண்மை விரிவாக்க சேவைகள் அவர்களின் கிராமங்களிலேயே வழங்குவதால், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இம்முகாம்கள் மூலம் பல்வேறு துறைகளின் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை பெற்று விவசாயம் செய்வதன் மூலம் வேளாண் உற்பத்தி பெருகுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள்,  தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, வேளாண்மைப் பொறியியல்துறை கண்காணிப்புப்பொறியாளர் திருமதி இந்திரா, விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் திரு.வேலுச்சாமி, வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி தனலட்சுமி, உதவி இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) மரு.முருகன், பேராசிரியர் (வேளாண் அறிவியல் நிலையம், கோவிலாங்குளம்) திரு.பாலசுப்பிரமணியம், உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News