மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (04.07.2025) மாவட்ட தீ தடுப்பு பாதுகாப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழும் வெடிவிபத்தினை தடுப்பது குறித்த வழிமுறைகளான அனுமதிக்கப்பட்ட அளவில் இரசாயன வேதிப்பொருட்களை கையாள்வது, ஒவ்வொரு உற்பத்தி அறை, வேதிப்பொருட்கள் கலவை மற்றும் நிரப்புதல் அறைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது குறித்தம், பாதுகாப்பாக மணி மருந்து கையாளுதல்; குறித்தம், உள்குத்தகை விடுவதை தடுப்பது குறித்தும், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்தும், பட்டாசு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்; அறிவுரை வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள், மற்றும் இணை இயக்குநர் பயிற்சி மையம்) சிவகாசி வெடிப்பொருள் கட்டுபாட்டு துறை அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தீயணைப்பு அலுவலர், தனி வட்டாச்சியர் (தீ.தொ.ஆ) மற்றும் டான்பாமா, டிப்மா, சிப்மா, டாப்மா, சிறு,குறு பட்டாசு உற்பத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply