இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் பார்முலா1 கார்பந்தயத்தில் 'சாம்பியன் !
அபுதாபி கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள யாஸ் மரினா ஓடுகளத்தில் ,பார்முலா 1 கார்பந்தயத்தின் 24-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. பட்டம் வெல்வதில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென். இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ், ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியதால் இறுதி சுற்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் பந்தய தூரமான 306.183 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
24 சுற்று முடிவில் இங்கிலாந்து வீரர் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) மொத்தம் 423 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து முதல்முறையாக பார்முலா 1 கார்பந்தய சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். 26 வயதான நோரிஸ் கூறுகையில், 'இதை என்னால் நம்ப முடியவில்லை. நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. என்றார்.
0
Leave a Reply