25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >>


ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பூண்டு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பூண்டு

ஒரு சில பூண்டுகளை நசுக்கி, தயிருடன் உப்பு, சீரகப் பொடி கலந்து சாப்பிட்டு வர நோய்த்தொற்று தடுக்கப்படும்.

பாலுடன் அரைத்த பூண்டு விழுது சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் பாலியல் ஆரோக்கியம் ஏற்படும்.

:சில பூண்டு பற்களை எடுத்து நெய் சேர்த்து நன்றாக கிரிஸ்ப்பாக வரும் வரை வறுத்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டு வரநன்றாக பசி எடுக்கும். செரிமானத்தை மேம்படுத்தும்.

சில பூண்டு பற்களை எடுத்து, தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர எடை குறையும்.

ஒரு சில நறுக்கிய பூண்டு பற்களை தேனுடன் சேர்த்து காலை வேளையில் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சில பூண்டு பற்களை நசுக்கி, எண்ணெயில் பிரவுனாக வரும் வரை வறுக்க வேண்டும் அந்த எண்ணெயை வடிகட்டி, பூஞ்சை தொற்று மற்றும் சொரியாசிஸ், அலற்சி உள்ள இடங்களில் தட நோய் குணமாகும்

சில பூண்டு பற்களை இரவு முழுவதும் ஒயினில் ஊற வைத்து அதன் பிறகு அரைத்து வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சூடான பாலில் அரைத்த பூண்டு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்து வர இருமல்.'' ஆஸ்துமா, பிற சுவாச பிரச்சனைகள் சரியாகும்.

பூண்டை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News