இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில், தங்கம் வென்றார் .
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட் கன்) எகிப்தின் கெய்ரோவில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில்தகுதிச்சுற்றில் ,இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட், மான்யா. அனுஷ்கா. ஸ்ரீவள்ளி உட்பட 22 பேர் பங்கேற்றனர்.
'டாப்-8 வீராங்கனைகள், இதில் 578 புள்ளியுடன் 6வது இடம் பெற்ற பிராச்சி உட்பட, ' பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் தகுதிச்சுற்றுடன் திரும்பினர். அடுத்து நடந்த பைனலில் (10.0) பிராச்சி, மொத்தம் 354.6 புள்ளி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். இந்தியாமொத்தம் 9 பதக்கம் வென்று (2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
0
Leave a Reply