25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சியர்,அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சியர்,அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதி கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இருந்து (23.04.2026) நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 
(EVM) மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (22.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

இராஜபாளையம் (202): 2,14,192,

ஸ்ரீவில்லிபுத்தூர் (203): 2,24,122

சாத்தூர் (204): 2,29,330

சிவகாசி (205): 2,28,205

விருதுநகர் (206): 2,00,618

அருப்புக்கோட்டை (207): 2,07,750

திருச்சுழி (208): 2,05,301

மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள்: 15,09,518 உள்ளனர்.

7-சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 29 மண்டலங்களில் உள்ள 269 வாக்குச்சாவடிகளுக்கு 538 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 269 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 29 மண்டலங்களில் உள்ள 308 வாக்குச்சாவடிகளுக்கு 308 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 308 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் இயந்திரங்களும்,  சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 22 மண்டலங்களில் உள்ள 291 வாக்குச்சாவடிகளுக்கு 582 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 291 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 291 விவிபேட் இயந்திரங்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 25 மண்டலங்களில் உள்ள 290 வாக்குச்சாவடிகளுக்கு 290 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 290 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 290 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 28 மண்டலங்களில் உள்ள 281 வாக்குச்சாவடிகளுக்கு 281 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 281 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 281 விவிபேட் இயந்திரங்களும்,

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 26 மண்டலங்களில் உள்ள 270 வாக்குச்சாவடிகளுக்கு 540 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 270 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 270 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 29 மண்டலங்களில் உள்ள 292 வாக்குச்சாவடிகளுக்கு 584 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 292 விவிபேட் இயந்திரங்களும்,என ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதியிலிருந்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

          மேலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தயார் நிலையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.மேலும், (22.04.2026) மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 2,001 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள பயிற்சி அளிக்கப்பட்ட 9,604 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 20 சதவீதம் கூடுதல் வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் தயார் நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

          மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் நாளை (23.04.2026) தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News