திருமண தடைகளை நீக்கும் நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரன் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே அமைந்துள்ளது நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோவில் பக்தர்களின் பசியை போக்கும் புண்ணிய தல மாகவும், கேட்கும் வரத்தை கொடுக்கும் ஆலயமாகவும் இக்கோ வில் விளங்குகிறது.
சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில், தியாகதுருகம் அருகே சந்தைமேட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவுடையார் கோவில். இக்கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த சித்தர், பல ஆண்டு காலம் இங்கு தங்கி சிவனுக்கு பூஜைகள் செய்தும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வந்தார். அப்போது சித்தர் பெருமான், கோவில் வளாகத்திற்குள் வரும் நாக பாம்பின் நஞ்சை தனது கையில் வாங்கி உண்டு வந்துள்ளார். இதனால் அந்த சித்தர் 'நஞ்சுண்ட ஞான தேசிகர்' என அழைக்கப்பட்டார். பின்னர் நாளடை வில், சித்தர் பெருமான் கோவில் மூலவருக்கு அருகில் ஜீவசமாதி அடைவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு ஜீவ சமாதி அடைந்தார். அதன் பிறகு ஆவுடையார் கோவில், 'நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவில்' என அழைக்கப்படு கிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து, தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.
சித்தர் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சித்தர் தனது உடலில் உள்ள கை, கால்கள் மற்றும் தலை ஆகிய வற்றை தனித்தனியாக பிரித்து மீண்டும் இணைத்ததாகவும், இதனை அப்பகுதி மக்கள் பலர் ஆச்சரியமுடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவ்வாறு பார்த்த ஒரு சிலர் அதிர்ச்சியில் இறந்து போனதாகவும் முன்னோர் கள் கூறுகின்றனர்..
0
Leave a Reply