ராஜபாளையம் கால்வாய்களில் மழைக் காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால் துாய்மை பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை செயல் பாட்டிற்கு வந்த பின்பும் கால்வாய்களில் மழைக் காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் சென்று பாதிப்பு ஏற்படுத்துகிறது.
சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ்ஸ்டாண்ட் செல்லும் ஓடையில்மக்களால் துாக்கி வீசப்பட்ட குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக்பைகள், தெர்மாகோல் ஓடை பாலத்து தூண்களில் தடுக்கப்பட்டு மொத்தமாக தேங்கிநின்றன.இவற்றை அகற்ற துாய்மை பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடந்த முறை பெய்த கன மழையால் அகலமான கால்வாயையும் மீறி கழிவு நீர் ரோட்டில் ஓடியதுடன் அருகாமையில் இருந்த வாகன காப்பகம் உள்ளிட்டவைகளுக்குள் புகுந்து பலத்த சேதம் ஏற்படுத்தின.
ஒருமுறை உபயோகித்து வீசி எரியும் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில்நகராட்சி பகுதிகளில் ,கண்காணிப்பை அதிகரிப்பதுடன் கழிவுகளைமுறையாகதூய்மைபணியாளர்களிடம்ஒப்படைக்கவேண்டும்.இதுகுறித்துதொடர்விழிப்புணர்வுநடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
0
Leave a Reply