25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் - 2025
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் - 2025

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட்  மண்டபத்தில் (06.08.2025) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி குறித்த பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் - 2025 வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் (சென்னை) திரு.த.ஆபிரகாம்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள்ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறுதானியங்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது. இச்சிறுதானியங்கள் இரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் ஏற்றுமதிக்கு உகந்த பயராகவும் உள்ளது.இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக  விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.மேலும், தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்தேச சந்தைகளை ஆய்வு செய்வது அவசியமாகின்றது.மேலும்,  உற்பத்தியாளர்களுக்கு அதிக விளை கிடைத்திடவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டும், விநியோகச் சங்கிலியின் செயல்திறனை அதிகரிக்கவும்,  விவசாயிகளுக்கு இது போன்ற பயிற்சிகள் மற்றும் உற்பத்தியாளர் வர்த்தகர்கள் இணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு  வருகின்றன.

தென் மாவட்டங்களில் சிறுதானியங்கள், சிறுதானிய உணவு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதற்கான தேவை இருக்கிறது.எனவே, விவசாயிகள், வணிகர்கள்  வணிகம் செய்வது, மதிப்பிக்கூட்டல், வங்கி கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு, இந்திய அளவிலே முதல் முறையாக வேளாண்மைக்காக 5 முறை தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து,   வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும், வேளாண்மை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி, வேளாண் பெருமக்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

 அந்த வகையில் தான் இந்த உற்பத்தியாளர் மற்றும் வணிகர்களுக்கான இணைப்பு கூட்டம் இன்றைக்கு நடைபெறுகிறது. இது போல் இணைப்பு கூட்டங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மண்டலங்களில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியினுடைய நோக்கம் என்னவென்றால், வேளாண் பெருமக்களுக்கு அவர்களின் விளை பொருட்களுக்கு, சரியான விலை நிர்ணயித்து வாங்குபவரை கண்டறிந்து, அவர்களுடைய பொருளை சரியான விலைக்கு விற்று உரிய விலையை பெற வேண்டும் என்பதும், தொழில்நுட்ப உரைகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தாய்வுகளில் விவசாயிகள் தங்களது அறிவை மேம்படுத்தி, விவசாயத்தில் மதிப்புக் கூட்டுதல் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வேளாண் பெருமக்கள் செல்வதை ஊக்கப்படுத்துவதற்காகவும், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

 சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 2023-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை சேர்த்துள்ளது.அதன்படி, தமிழ்நாடு அரசு இந்த சிறுதானிய இயக்கத்தின் கீழ், மதிப்பு கூட்டல் நிறுவனங்களுக்கு  இயந்திரங்களை வாங்குவதற்காக 75 சதவீதம் மானியத்துடன் கூடிய நிதி உதவியை வழங்கி வருகிறது.அந்த வகையில் இதுவரை 31 பயனாளிகள் ரூ.3.05 கோடி மதிப்பிலான மானியங்களை பெற்று தொழில்களை தொடங்கி இருக்கிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில், வேளாண் விளைப்பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இத்திட்டத்தின் மூலம் 10 கோடி வரையிலான திட்டங்களுக்கு 25 சதவீதம் மானியமும்,பெண்கள், தொழில் முன்னேற்றத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவிகிதம் மானியமாக அதிகப்பட்சம் ரூ.1.50 கோடி வழங்கப்படுகிறது.

இந்த புவிசார் குறியீடு உரிமம் பெறுவதன் மூலமாக ஏற்றுமதிகளை நாம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, மிகப்பெரிய அந்நிய செலவாணியை ஈட்ட முடியும். இதுபோன்று, தமிழ்நாடு அரசானது வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இது போன்ற கூட்டங்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி மு.சுமதி அவர்கள் சிறுதானிய பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் மத்திய மாநில திட்டங்கள் என்ற தலைப்பிலும்,வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல தலைவர் திருமதி சோபனா அவர்கள் சிறு தானியப் பயிர்களின் ஏற்றுமதி வாய்ப்புகள், சந்தை தேவைகள் மற்றும் APEDA நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,வேளாண் ஏற்றுமதி தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் முத்த மேலாளர் திரு.பரத்குமார் அவர்கள் சிறுதானியப் பயிர்கள் ஏற்றுமதியில் TNAPEX  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிலையம் (ஹைதராபாத்) முனைவர் ஏ.சீனிவாஸ் அவர்கள் சிறுதானியங்கள் மதிப்புச் சங்கிலி மேம்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகள் என்ற தலைப்பிலும்,
உணவு அறிவியல் துறை, சமுதாய அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர் (மதுரை)   முனைவர் A.கலைச்செல்வன் அவர்கள் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஏற்ற நவீன சிறுதானிய மதிப்பு கூட்டு தொழில்நுட்பங்கள்  என்ற தலைப்பிலும்,

தாவர சுகாதார மையத்தின் அலுவலர் முனைவர் ஸ்ரீ ஹர்சா அவர்கள் சிறுதானியப் பயிர்களின் ஏற்றுமதி தரத்தை அடைவதற்கான பியர் சுகாதார நடவடிக்கைகள் என்ற தலைப்பிலும்,குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் உதவி இயக்குநர் திரு. Gசிமியோன் அவர்கள் சிறுதானியப்பயிர்களின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மதிப்புக் கூட்டுகலுக்கான திட்டங்கள் என்ற தலைப்பிலும்இளம் தொழில்முறை நிபுணர், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ((DGFT), கோவை     திருமதி B.ஹரிப்பிரியா அவர்கள் சிறுதானியப்பயிர்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் DGFT  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,துணை இயக்குநர், இந்திய சிப்பம் கட்டும் நிறுவனம் (சென்னை) அவர்கள் ஏற்றுமதிக்கேற்ற தளத்தில் சிறுதானிய பயிர்களை சிப்பமிடும் முறைகள் என்ற தலைப்பிலும்,இந்திய ஏற்றுமதி கடன் உத்திரவாத நிறுவனம்(ECGC)), மதுரையின் கிளை மேலாளர் திரு.சுபாஷ் குமார் ஜா அவர்கள் சிறுதானியப் பயிர்கள் ஏற்றுமதியில் இந்திய கடன் உத்தரவாத ஏற்றுமதி நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,

மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம், மதுரை, முதன்மை செயல் அலுவலர் திரு.K.கணேசமூர்த்தி அவர்கள் சிறுதானியப்பயிர்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் MABIF  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,UCORP Exim, திருச்சி திரு.உதயகுமார் அவர்கள் வேளாண் ஏற்றுமதி: உலக வர்த்தகத்தில் உங்களின் நுழைவாயில் என்ற தலைப்பிலும்,அங்கக வேளாண்மை ஆலோசர் திரு.மகேந்திரா எம் மணிவாசன் அவர்கள் அங்கக உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கான நடைமுறைகளும், சான்றிதழ்களும் என்ற தலைப்பிலும்,இணை பேராசிரியர் NIFTEM தஞ்சாவூர் முனைவர் அகல்யா அவர்கள் சிறுதானிய பயிர்களின் ஏற்றுமதில் மதிப்புக்கூட்டுதலின் இன்றியமையாமை என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News