25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை  மதி பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மதி பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை  மதி பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S., அவர்கள் திறந்து வைத்தார்.பின்னர், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த 42 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.49.50 இலட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு கடனுதவிகளையும்,

கிழவிகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.35 கோடி மதிப்பிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.95 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மகளிர் சுய உதவிக்களுக்கு வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பெண்கள்; மகளிர் சுய உதவிக்குழுவில்; இருக்கின்றனர். அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறு சிறு தொழில்களை செய்யக்கூடியவர்களாகவும், தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்.

நிறைய பேர் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்கள். இந்த சுய உதவி குழுவில் இணைகின்ற பொழுது அதன் மூலமாக நன்மைகளை பெறக்கூடிய சகோதரிகளாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்னும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
பெண்களுக்கான விடுதலை என்று சொல்கின்ற பொழுது அவர் விரும்பிய பணியை செய்வது தான் சுதந்திரம்.
இன்றைய சமூகத்தில் இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பெண்களுக்கான மிக  வலிமையான விடுதலை என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார சுதந்திரம் தான். அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். தான் சம்பாதித்ததை, தான் உருவாக்கிக் கொண்ட செல்வத்தை முழுமையாக தானே அந்த செல்வத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைப்பதே மிக முக்கியமான பெண்களுக்கான விடுதலை ஆகும்.

பெண்கள்  தங்களுக்கான அரசு திட்டங்களை தெரிந்துகொண்டு,  தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை பெற்று, அரசு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக முதலீடு செய்து தங்களுடைய வருமானத்தை பெருக்கி, குடும்ப  பொருளாதாரத்தையும், சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்)  திரு. திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News