25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

வாலிபால் சாம்பியன்ஷிப் (16 வயது) தாய்லாந்தில் நடக்கிறது.இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் (தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா) வென்றது. அடுத்து வலிமையான உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி,உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடருக்கு (2026, பல்கேரியா) முதன் முறையாக தகுதி பெற்றது.வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜப்பானை சந்தித்தது. முதல் செட்டை இந்தியா 25-21 என கைப்பற்றியது.

அடுத்த செட்டை 12-25 என இழந்த போதும், 3வது செட்டை 25-23 என கைப்பற்றியது. 4வது செட்டை 18-25 என நழுவவிட்டது.  வெற்றியாளரை முடிவு செய்யும் 5வது, கடைசி செட்டில் இந்திய அணியினர் 15-10 என கைப்பற்றினர் .முடிவில் இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில்'வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News