கிராமத்து பிரண்டைஊறுகாய் (village style pirandai pickle )
தேவையான பொருட்கள் -
1 கப்சுத்தம் செய்து நறுக்கின பிரண்டை,1/4 கப் நறுக்கின பெரிய வெங்காயம் ,2டேபிள்ஸ்பூன் தோலுரித்து நறுக்கின பூண்டு,
1டீ ஸ்பூன் ம.தூள், 2 ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்,தேவைக்குகல்லுப்பு, 2 1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் வெந்தயம்.2 சி.மிளகாய்,
1 ஆர்க்குகருவேப்பிலை, 1 ஸ்பூன்பெருங்காயத் தூள், 1/4 கப் ந.எண்ணெய்,.1 கோலி குண்டளவு புளி
செய்முறை –
பிரண்டையை நன்கு சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை நன்கு வறுக்கவும்.வறுத்து தட்டில் ஆற விடவும்.
சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு,சற்று கொரகொரப்பாக பொடித்து தட்டில் போடவும்.அடுப்பைமீடியத்தில்வைத்து,ந.எண்ணெய்காய்ந்ததும்,வெங்காயம், புளி,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.பௌலில் ஆற விடவும்.பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
கடாயில்,மீதமான ந.எண்ணெயில், பிரண்டையை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.அரைத்த விழுதுடன், வதக்கிய பிரண்டையை போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகை போடவும்.கடுகு பொரிந்ததும், மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்த எண்ணெயில், ம.தூள், மி.தூள், உப்பு போட்டு நன்கு, வதக்கவும்.அடுத்து வதக்கிய விழுதை போட்டு ஒன்று சேர சுருள வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு, வறுத்த பொடி, பெருங்காயத் தூள் போட்டு கிளறவும்.அடுத்து,பௌலுக்கு, மாற்றி, மேலே காய்ச்சாத ந.எண்ணெயை விடவும். இப்போது, சுவையான, ஆரோக்கியமான, கிராமத்து பிரண்டை ஊறுகாய் தயார்.
0
Leave a Reply