25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


விருதுநகர் மாவட்டம்   நடுச்சத்திரம் காசிவிஸ்வநாதர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம்  நடுச்சத்திரம் காசிவிஸ்வநாதர்.

விருதுநகர் மாவட்டம் நடுச்சத்திரம் கிராமத்தில் உள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம். இந்த ஆலயம், கோவில் அமைப்பில் பல அதிசயங்களையும் அற்பு தங்களையும் கொண்டது. இக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாசிவிஸ்வநாதர், இறைவி ஸ்ரீஅன்னபூரணி. இந்த ஊரில் உள்ள சிவபக் தர்கள் இந்த ஸ்ரீகாசிவிஸ்வ நாதர்-ஸ்ரீஅன்னபூரணி திருக்கோவிலை, 'இந்தியா வின் இரண்டாவது காசி' என்றே கொண்டாடுகிறார் கள்.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் இது. தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வை யில் உள்ளது. இங்கு வற்றாத நூபுர கங்கை தீர்த்தக் கிணறு உள்ளது. இந்தக் கோவில், காசியில் இருந்து நேர்கோட்டில் அமையப்பெற்றிருப்பதாக சொல்கிறார் கள்.

 

தற்போது கோவில் அமைந்துள்ள இடம், அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். கோவிலின் அருகிலேயே ஓர் அழகான நீர்நிலை உள்ளது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு,காசிக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தைகாசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்ற னர். இந்த வழியாகக் காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்தில் தங்கி, இங்குள்ள சிவபெருமானை தரிசித் துவிட்டுச் செல்வது வழக்கம்.

 

பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன் னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம் ஆலய நிர் வாகத்தை ஒப்படைத்தனர். அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இவர்கள் சில தலைமுறை களாக இந்தக் கோவிலைப் பாதுகாத்து வந்துள்ளனர்.

 

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக் காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற் றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் எலுமிச்சை மாலையை அன்னபூரணி அம்மனுக்குச் சூடி, சுவாமியை தரிசித்து விட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்களுக்கு இங்கு வந்து, அன்ன பூரணி அன்னைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். குழந்தை வரம் இல்லாத வர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் அமையும் என் பது பக்தர்களின் நம்பிக்கை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News