25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டம் 25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் 25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக  (25.06.2025) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், 2017-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முதன் முதலில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சார் ஆட்சியராகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வருவாய்), திருவள்ளூர்  மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வளர்ச்சி), அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையராகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.

தற்போது விருதுநகர் மாவட்டத்தின் 25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள்  (25.06.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News