சுரைக்காய் துவையல்.
தேவையானபொருட்கள்:1/2 சுரைக்காய்,2பச்சைமிளகாய்,சிறிதளவுகறிவேப்பிலை, சிறிதளவுமல்லித்தழை,உப்புதேவைக்கு ஏற்ப ,புளி சிறிதளவு,ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,1ஸ்பூன் கடுகு உளுந்து,1 ஸ்பூன் எண்ணெய்.
செய்முறை -கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,போட்டு தாளிக்கவும்.தோலை நீக்கி நறுக்கி வைத்திருக்கும் சுரைக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும்.நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தோசை இட்லியுடன் பரிமாறவும்.மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
0
Leave a Reply