25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 17, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் (15.03.2026)  இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் 72 மணி நேரத்திற்குள் அமுல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், அரசு வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும். பொது வளாகம் / கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலகங்கள், மின்கம்பங்கள் உள்ளாட்சிக்குட்பட்ட கட்டிடங்கள் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும். தனியார் வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க /அகற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, அனைத்து அரசு வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் செலவில் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.பொது வளாகம் / கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலகங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சிகளுக்குட்பட்ட கட்டிடங்கள் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையினரால் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.      தனியார் வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.அனைத்து அரசு அலுவலங்களிலும் கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைத்தல் / அகற்றுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட சட்மன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினர், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்காணும் அறிவுரைகளின்படி, தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையத்தின் உரிய காலக்கெடுவிற்குள் பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி,  சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S .,  உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Mar 17, 2026

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் - 2026 , 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு கிராமத்தில் (15.03.2026), எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S ., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று நடைபெற்ற இப்பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை வழங்கிப் பேசினார்.  இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்."வாக்களிப்பது நமது உரிமை", "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்" மற்றும் "ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், "வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களித்துத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். நேர்மையான, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

Mar 16, 2026

விருதுநகர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைஅமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (14.03.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் தலைமையில், 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.96 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்களையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.2.25 இலட்சம் திருமண உதவித்தொகைகளையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று 37 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,08,000/- வீதம் மொத்தம் ரூ.39.96 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயமும் மற்றும் மொத்தம் ரூ.2.25 இலட்சம் திருமண உதவித்தொகைகளையும் என ஆக மொத்தம் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.21 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆம் நிதி ஆண்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 360 நபர்களுக்கு ரூ.3.89 கோடி மதிப்பிட்டில் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு ரூ.8,75,000/- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைகள் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு அனைவரும் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில், உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 16, 2026

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்(விருதுநகர் மின்பகிர்மான வட்டம்)சார்பில் ரூ.6.99 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் பேரநாயக்கன்பட்டி கிராமத்தில்  (14.03.2026)தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்(விருதுநகர் மின்பகிர்மான வட்டம்)சார்பில் ரூ.6.99 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I AS , அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி ஒரு முக்கியமான தொழில் நகரமாகும். இது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்களுக்குப் பெயர் பெற்றது, நாட்டின் சுமார் 70 சதவிகித பட்டாசு உற்பத்தியை கையாள்வதால் "குட்டி ஜப்பான்" என்றும், இந்தியாவின் பட்டாசு தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அச்சுத்துறையில் சுமார் 60 சதவிகிதம் இங்கு செய்யப்படுகின்றன. மேலும், இந்த நகரம் தினக்குறிப்புப்புத்தகம் தயாரிப்பதில் முக்கின பங்கு வகிக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த தினக்குறிப்புப்புத்தகம் 30% இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. 2021-ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட சிவகாசி, தொழில்வளம் மிக்க நகரமாக விளங்குகிறது.சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அய்யனார் காலனி, சித்தூராஜபுரம், சசி நகர் மற்றும் விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளுக்கு சிவகாசியில் அமைந்துள்ள பாறைப்பட்டி 110/33-11 கே.வி துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியாலும், மக்கள் தொகைக்கு ஏற்பவும் இப்பகுதிகளில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதே போன்று இப்பகுதியை ஒட்டி, சாத்தூர் தொகுதியில் அமைந்துள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு 110/ 33-11 கே.வி பாறைப்பட்டி, 33/11 கே.வி சாட்சியாபுரம் மற்றும் 33/11 கே.வி வெம்பக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.இப்பகுதிகள் மேற்படி துணை மின் நிலையங்களின் கடைக்கோடி பகுதியில் அமைந்திருப்பதால், இப்பகுதியில் கோடை காலங்களில் தாழ்வழுத்த குறைபாடு நிலவுகிறது.எனவே, இப்பகுதிகளின் மின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், தாழ்வழுத்த குறைபாட்டை சரி செய்யும் பொருட்டும்,  தமிழக முதல்வர் அவர்களால் சட்டமன்ற கூட்ட தொடரில் எரிசக்தித் துறை மானிய கோரிக்கையில் சாத்தூர் தொகுதியில் உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரு புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இத்துணை மின் நிலையம் அமைப்பதற்காக பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 4.94 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு பெறப்பட்டு,  ரூ.6.99 கோடி மதிப்பில் இரண்டு 8 MVA, 33/11 கேவி மின்மாற்றிகளுடன் புதிய 33/11 கே.வி துணை மின் நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய துணை மின் நிலையத்தால் 25,000 ற்கும் மேற்பட்ட மின்நுகர்வோர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தடையில்லாத தரமான மின்சாரம் வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மேற்பார்வை பொறியாளர்(விருது நகர் வட்டம்) திரு.பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர் திரு. பாவநாசம், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 14, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்  139 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,(13.03.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள  130 பெண்களுக்கும் மற்றும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9 குழந்தைகளுக்கும் என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.11.07 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்க்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக "கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்" உருவாக்கப்பட்டுள்ளது. இந்நலவாரியத்தில் தற்போது வரை 19,217 பெண்கள் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர்.இந்நலவாரியத்தில் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டுள்ள பெண்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தையல் பயிற்சி பயின்ற 127 பெண்கள் மற்றும் உங்களுடன் எஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனு அளித்த 2 பெண்கள் என 129 பெண்களுக்கு தையல் இயந்திரம் ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பெண்களுக்கு ரூ.6,77,927/-மதிப்பீட்டின் கீழ் தையல் இயந்திரங்களையும்,கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் கீழ்    தையல் தொழில் துவங்கிட மாவட்ட தொழில் மையம் மூலம் 1 பயனாளிக்கு ரூ.50,000/- மானியத்தினையும்,முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் 5 பயனாளிகளுக்கு ரூ.2,50,000/- மதிப்பீட்டில் புதிய வைப்புத் தொகை இரசீதுகளையும் (New Deposit Receipt), பயனடைந்து 18 வயது பூர்த்தியடைந்த 4 பயனாளிகளுக்கு  (Maturity Amount) ரூ.1,28,800/- மதிப்பிலானமுதிர்வு தொகைக்கான காசோலைகளை என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.11.07 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

Mar 14, 2026

நடப்போம் நலம் பெறுவோம் 2.0" - 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk)   திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடைபாதையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்(13.03.2026) திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில், "நடப்போம் நலம் பெறுவோம் 2.0" - 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk) திட்டத்தினை  தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், சாத்தூரில்  மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடைபாதையை திறந்து வைத்து நடைப்பயிற்சி  மேற்கொண்டார். உலக சுகாதார அமைப்பு தரவுகளின்படி உடற்பயிற்சி செய்வது என்பது நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் என்பது 28 சதவிகிதம் குறைக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதய நோய் என்பது 30 சதவிகிதம் வரை குறைக்கிறது என்கின்ற தகவலும்  நிலைப்படுத்தப்பட்டுள்ளது.எனவே மக்கள் தினந்தோரும் நடைப்பயிற்சி என்பது மிக சிறந்த வகையில் உடலை பேணிக்காக்கும் அடையாளம் என்று கருதப்படுகிறது.இத்திட்டத்தை கடந்த 2023 நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர்  அவர்கள்    38 மாவட்டங்களிலும் இத்திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற திட்டம், நடப்பதை ஊக்குவிப்பதற்கும், நடக்க வேண்டும் என்பதை கடந்து பங்கேற்பவர்கள் தொற்றா நோய் பாதிப்புகளை தெரிந்து கொள்வதற்கும் மிக பெரிய உதவியாக இருந்தது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 ஆவது  முறையாக 38 மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை   தொடங்க வேண்டும் என்ற உத்தரவின்படி,  (13.03.2026) நடப்போம் நலம் பெறுவோம் 2.0 திட்டம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் (13.03.2026) மாவட்ட ஆட்சியர்அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நடைபாதையை திறந்து வைத்து, நடைப்பயிற்சி மேற்கொண்டார்.பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை மையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டார். இந்த நடைபாதை, சாத்தூர் ரயில்வே கேட் சாலையில்  துவங்கி ஆட்டுப்பண்ணை வரை சென்று திரும்பும் வகையில்   அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ஜெகவீரபாண்டியன் குணசேகரன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.குருசாமி, இருக்கண்குடி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சாத்தூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என சுமார் 500 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Mar 14, 2026

காவல்துறையில் “Orderly System” நடைமுறையில் இருப்பதாக யாரிடமாவது தகவல் இருந்தாலோ அல்லது அதுகுறித்து புகார் அளிக்க விரும்பினாலோ, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் மாவட்ட அளவிலான குழுவிற்கு புகார் அளிக்கலாம்.

அரசு வெளியிட்ட G.O.(Ms) No.29, Home (Police–VI) Department, நாள் 21.01.2026 மற்றும்  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், காவல்துறையில் நடைமுறையில் இருந்த “Orderly System” (ஆர்டர்லி முறை) முறையை முழுமையாக ஒழிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.மேற்கண்ட உத்தரவுகளை செயல்படுத்தும் பொருட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து, அதன் நடைமுறையை உறுதிசெய்யும். எனவே, காவல்துறையில் “Orderly System” நடைமுறையில் இருப்பதாக யாரிடமாவது தகவல் இருந்தாலோ அல்லது அதுகுறித்து புகார் அளிக்க விரும்பினாலோ, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் மாவட்ட அளவிலான குழுவிற்கு புகார் அளிக்கலாம்.புகார்கள் அளிக்கும் வழிமுறைகள்:தொலைபேசி மூலம்:மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி எண்.1077) மின்னஞ்சல் மூலம்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.(மின்னஞ்சல் முகவரி. collrvnr@nic.in)எழுத்து மனு மூலம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கலாம். புகார்கள் அளிக்கும் போது, நிகழ்ந்த இடம், தொடர்புடைய நபர்கள் மற்றும் புகாரின் தன்மை போன்ற விவரங்களை தெரிந்தவரையில் குறிப்பிடலாம். புகார்கள் எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அளிக்கலாம். பெறப்படும் அனைத்து புகார்களும் மாவட்ட அளவிலான குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உட்பட தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.புகார் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும். காவல்துறையில் “Orderly System” முறையை முழுமையாக ஒழிக்க பொதுமக்கள் முன்வந்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார். 

Mar 13, 2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு கடனுதவிகளை அமைச்சர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், (12.03.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் வழங்கும் விழாவில்,  நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.மேலும், 5 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், சமுதாய திறன் பள்ளி திட்டத்தின்கீழ் நிறைவு செய்த 120 இளைஞர்களுக்கு சான்றிதழ்களும், 4 சுய உதவிக் குழுக்களுக்கும் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகளை  நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் 450 ஊராட்சிகளில் 10,347 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. நகர்புறப் பகுதிகளில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் மொத்தம் 3,943 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கு (2025-26) விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.1007 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு நாளது தேதி வரை 8,948 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.922.38 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, இன்று மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊரகம் மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் 54,325 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3787.46 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையச் செய்திட வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது ஒரு எண்ணிக்கையாக மாத்திரம் இல்லாமல் இது ஒவ்வொரு பெண்கள், தாய்மார்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தான் இதனுடைய வெற்றி இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கக் கூடிய காரணத்தினால் தான் எப்போதும் இல்லாத வகையில் இந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாபெரும் ஒரு ஆதரவு கரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், இந்த துறையின் அமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் நீட்டியிருக்கிறார்கள்.நிதி அமைச்சர் என்கின்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நான் வங்கிகளை அழைத்து எவ்வளவு பேருக்கு கடன் வழங்கப்படுள்ளது. வங்கிகள் எந்த வகையில் பெண்களுக்கு ஆதரவு தருகிறீர்கள், மாவட்ட நிர்வாகம் இதை எந்தளவிற்கு ஒருங்கிணைக்கிறது என்பதை முன்னோடி வங்கியுடன் இணைந்து, பல்வேறு வங்கிகளையும் அழைத்து ஆலோசனை செய்து தேவைப்படக் கூடிய அளவிற்கு கடனுதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். கடன் பொருளாதாரம் நம் வாழ்க்கையினுடைய முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான பொருளாதாரமாக இருக்கிறது. கடன் பொருளாதாரத்தின் வாயிலாக கடைக்கோடி பகுதிகளில் இருக்கக்கூடிய மகளிரினுடைய முன்னேற்றத்திற்கு நாம் மிகப்பெரிய அளவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.கடன் பொருளாதாரத்தின் வாயிலாக மட்டுமல்லாமல் அவர்களுடைய  வாழ்க்கையில் சமூக நிலையிலும் உயர்த்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல சமூக வளர்ச்சியும் அவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. பெண்களுக்கான கல்வி, போக்குவரத்து வசதிகளில், சமுதாயத்தில் பெண்களுக்கென்று மிக முக்கியமான இடம் அமைய வேண்டும்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகின்ற போது அந்த பெண் வளரக்கூடிய வளர்ச்சி அந்த பெண்ணிற்கான வளர்ச்சியாக மட்டுமல்ல, அந்த குடும்பத்திற்கான வளர்ச்சியாக மட்டுமல்ல, அந்த பெண் இருக்கக்கூடிய இடத்திற்கான வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் உடைய வளர்ச்சிக்கும் இது ஊன்றுகோலாக அமைகின்ற என்கின்ற வகையில்தான், ஒவ்வொரு திட்டங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தீட்டுகிறார்கள்.இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1.31 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு பெண்ணும் ஏறத்தாழ ரூ.888 அவர்கள் சேமிக்க முடிகிறது என்பதை இலக்காகக் கொண்டு இந்த பயணம் உறுதி செய்யப்படுகிறது. பெண் பிள்ளைகள் உயர் கல்விக்கு செல்கின்ற பொழுது அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.காலை வேளைகளில் பெண்கள் எண்ணற்ற வேலைகளை எடுத்துக் கொண்டு செய்கின்ற போது, அவர்கள் வேலைப்பளுவை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதெல்லாம் ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றமாக உருவாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.வளர்ச்சி என்று வருகின்ற பொழுது, அந்த வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இருக்கின்றதா, சுற்றுச்சூழலோடு இணைந்து போகக்கூடிய வளர்ச்சியாக இருக்கின்றதா என்று பார்த்தால், இன்றைக்கு நிதி ஆயோக் நிறுவனம் தேர்ந்தெடுக்கக்கூடிய இலக்குகளில் மிகப்பெரிய அளவிலே முன்னோடியாக இருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று சொன்னால் சுற்றுச்சூழலோடு இணைந்து இருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியை நாம் இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.எனவே அனைவருக்குமான லட்சியம் ஒரு அற்புதமான சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும். முதலமைச்சர் அவர்கள் காணக்கூடிய கனவு பெண்களுக்கான விடுதலை, பெண்களுக்கான தற்சார்பு, கல்வி, கௌரவம், பொருளாதார வளர்ச்சி. பெண்கள் என்று சொன்னால் அந்த பெண்கள் சக்தி என்பதை நாம் நிரூபிக்க கூடிய மாநிலமாக உருவாக வேண்டும் என தெரிவித்தார்.சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று சுய சார்புடன் தமது சொந்தகாலில் நிற்க வேண்டும் எண்ணத்துடன் அவர்களை ஆற்றல்படுத்திடவும் அதிகாரப்படுத்திடவும், மகளிர் வாழ்வில் உள்ள வறுமை என்னும் இருளை நீக்கி வளம் என்னும் ஒளியை பரவச் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதனடிப்படையில், இன்றைய தினம் காரியாபட்டி நகர்ப்புற பகுதிகளில் உள்ள 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.67 இலட்சம் மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலும், நரிக்குடி ஊரகப் பகுதிகளில் உள்ள 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலும், திருச்சுழி ஊரகப் பகுதிகளில் உள்ள 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பிலும்,சிவகாசி நகர்ப்புற பகுதிகளில் உள்ள 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88.63 கோடி மதிப்பிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 25 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.48 கோடி மதிப்பிலும், விருதுநகர் என மொத்தம் 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.55 கோடி கடனுதவிகளும்.அமுத சுரபி நிதி 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.04 கோடி கடனுதவிகளும், வட்டார வணிக வள மையம் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சமும், சமுதாய முதலீட்டு நிதி 502 குழுக்களுக்கு ரூ.3.14 கோடி கடனுதவிகளும், நலிவு குறைப்பு நிதி 240 பயனாளிகளுக்கு ரூ.67.61 இலட்சம் கடனுதவிகளும், நுண் நிறுவன நிதி 106 பயனாளிகளுக்கு ரூ.65.50 இலட்சம் கடனுதவிகளும், ஆக மொத்தம் 1245 பயனாளிகளுக்கு ரூ.15.48 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்ற, பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும்,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும்,  அமைச்சர் பெருமக்களும் நமக்கு வழங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Mar 13, 2026

விருதுநகர் மண்டலம் சார்பில் திருவில்லிபுத்தூர் கிளையில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விபத்தில்லா ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம்(மதுரை கோட்டம்) விருதுநகர் மண்டலம் சார்பில் திருவில்லிபுத்தூர் கிளையில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விபத்தில்லா ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா (11.03.2026) மேலாண்மை இயக்குனர் திரு.வி.சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சாலை விதிகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த   ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு விழா நடத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இவ்வாண்டு நமது மதுரை கோட்டத்தில் உள்ள மூன்று மண்டலங்களில் மதுரை மற்றும் திண்டுக்கல் மண்டலத்தில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் மூன்றாவது விழாவாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா விருதுநகர் மண்டலத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான பாதுகாப்பான பேருந்து  சேவைகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்தியுள்ளார்கள்.குறிப்பாக மகளிர்களுக்கான விடியல் பயணத்திட்டத்தின் வாயிலாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.அதுபோல மாற்றுத்திறனாளிகள்,  பள்ளி மாணவ மாணவியர்கள், திருநங்கைகள் உட்பட எண்ணற்றவர்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.பொதுமக்களுக்காக சேவையாற்றி வருகிற ஓட்டுநர்கள் சாலைவிதிகளை கண்டிப்பாக கடைபிடித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான  பயணத்தினை  உறுதிப்படுத்த  வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.பின்னர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பாக பேருந்தைகளை இயக்கிய 50 ஓட்டுநர்களுக்கும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்திய 27 ஓட்டுநர்களுக்கும், சிறந்த தொழில்நுட்ப பணியாளர்கள், சிறந்த பொறியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இவ்விழாவில்  மண்டல பொது மேலாளர் திரு.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உதவிமேலாளர் (தொழில் நுட்பம் ) திரு.சத்தியமூர்த்தி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Mar 13, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் மற்றும் தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் (12.03.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர், அமைப்பு, கல்வி நிறுவனம் என  மூவருக்கு 2025  ஆம் ஆண்டிற்கான ‘பசுமை சாம்பியன்’ விருதுகள் மற்றும் தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகைகளை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் 03.09.2021 அன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, மாநில அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கும் 100 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் 'பசுமை சாம்பியன் விருது' மற்றும் தலா ரூ. 1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவிலான வெற்றியாளர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தேர்வு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், தேர்வு செய்யப்பட்ட திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த திரு.மாரியப்பன் என்பவருக்கு தனிநபர் பிரிவிலும், சிவகாசி பேஸ்புக் பிரண்ட்ஸ் என்ற அமைப்புக்கும், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருமதி சுதா என்வருக்கு கல்வி நிறுவன பிரிவிலும் என மூன்று வெற்றியாளர்களுக்குப் பசுமை சாம்பியன் விருது மற்றும் தலா ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் (TNPCB) மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விருதுகள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காட்டும் முன்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலை பாதுகாப்பு மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகளில் தீவிரமாகப் பங்காற்றியதற்காக இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்வில் திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.சு.இலக்குவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ஹேமந்த் ஜோசன்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், விருதுநகர்), காரியாபட்டி பேரூராட்சி தலைவர் திரு.செந்தில்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 131 132

AD's



More News