25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 05, 2024

சாத்தூர் ஊராட்சி ஒன்றியஆய்வுத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,  அவர்கள் (04.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கே.மேட்டுப்பட்டி கிராமத்தில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டங்களின் கீழ் ரூ.25.11 இலட்சம் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பில் இரண்டு சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,என்.மேட்டுபட்டி கிராமத்தில்; மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.96 இலட்சம் மதிப்பில் ஆடு மற்றும் மாட்டுக் கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளதையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,என்.மேட்டுபட்டி கிராமத்தில்; உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.49.30 இலட்சம் மதிப்பில் பள்ளி வளாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,எம்.நாகலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.72 இலட்சம் மதிப்பில் சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,நென்மேனி ஊராட்சி வன்னிமடை கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sep 05, 2024

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அலங்கார மீன்வளர்ப்பு தொடர்பான பட்டறிவு பயண வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (04.09.2024) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அலங்கார மீன்வளர்ப்பு குறித்து, தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகளை பார்வையிட்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டறிவு பயண வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S,  அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.அலங்கார மீன் வளர்ப்பு பிரபல பொழுதுபோக்காக கருதப்பட்ட நிலையில் தற்போது வளர்ந்து நன்கு லாபம் தரும் தொழிலாக மாறி உள்ளது.  இத்தொழில் ஏற்றுமதி துறையிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் குறிப்பாக பெண்கள் தங்களது வீட்டிற்கு அருகாமையில் வண்ண மீன் வளர்த்து லாபம் அடையலாம்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வீட்டிற்கு அருகாமையில் 300 சதுர அடியில் அலங்கார மீன் வளர்ப்பு மேற்கொள்ள மகளிர்களுக்கு1.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பெண்கள் வீட்டில் இருந்தவாறு அலங்கார மீன் வளர்ப்பு மேற்கொண்டு மாதம் ரூபாய் 15,000/ வரை சம்பாதிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொண்டு, அலங்கார மீன் வளர்ப்பில் பெண்கள் ஈடுபடும் வகையில் விருதுநகர் மாவட்ட  மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களை மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு  பண்ணைகளை நேரில் சென்று பார்வையிட்டு மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இன்று; அலங்கார மீன் வளர்ப்பு குறித்த பட்டறிவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் முதற்கட்டமாக  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 50 மகளிர் சுய உதவி குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, இணை இயக்குநர்ஃதிட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. ஜார்ஜ் மைக்கேல் ஆன்டனி, விருதுநகர்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  உதவி இயக்குனர் திரு.கு.இராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர் திருமதி.வனிதா, மீன்வள ஆய்வாளர்கள் திருமதி அம்சா காந்தி மற்றும்  திருமதி சுபானா, மகளிர் சுய உதவி உறுப்பினர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Sep 05, 2024

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துகம் பயில தேர்வாகியுள்ள செல்வன் ஜெ.அரவிந்த் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,(04.09.2024) இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துகம் பயில தேர்வாகியுள்ள செல்வன் ஜெ.அரவிந்த் என்பவரை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்  நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Sep 05, 2024

தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரம் மற்றும் இதர ஆற்றல் மூலங்களை சரியான முறையில் சிக்கனமாக உபயோகப்படுத்துவதற்கான பயிற்சி முகாம்

தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவைக் குறைத்து, இலாபத்தை அதிகரிப்பதற்கு மின்சாரம் மற்றும் இதர ஆற்றல் மூலங்களை சரியான முறையில் சிக்கனமாக உபயோகப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 41 சதவீதத்தை தொழில் நிறுவனங்களே உபயோகப்படுத்துகின்றன. எனவே தொழில் நிறவனங்களின் மின் நுகர்வை முறைப்படுத்தி சிக்கனப்படுத்துவது அவசியமானதாகும். பெரும் தொழில் நிறுவனங்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரத்தை அளவீடு செய்து ஆற்றல் தணிக்கையாளர்களைக் கொண்டு  ஆண்டுதோறும் ஆற்றல் தணிக்கை செய்வது கட்டாயமாகும்.ஆனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக, ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளில் 75 சதவீதத்தை தமிழ்நாடு அரசு மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலமாக திரும்ப அளிக்கிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவில் பெரும்பகுதி அப்பொருளை உற்பத்தி செய்யும் மின்சாரம் மற்றும் இதர ஆற்றல் மூலங்களுக்கு செலவாகிறது.எனவே தமிழ்நாடு அரசு ஆற்றல் தணிக்கை வல்லுநர்களைக் கொண்டு தொழில் நிறுவனங்களின் இயந்திரவியல், மின்னியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் இயந்திர பராமரிப்புப் பணியில் உள்ள மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ஆற்றல் சேமிப்பிற்கான பயிற்சிகளை மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக நடத்த 2021 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்திருந்தது.அதன்படி இவ்வாண்டிற்கான முதல் பயிற்சி கடந்த மாதம் ஆகஸ்ட் திருச்சுழி பகுதியில் உள்ள நூற்பாலை வளாகத்தல் நடைபெற்றது. இரண்டாவது பயிற்சி செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில்; நடைபெற்றது.மத்திய அரசின் BUREAU OF ENERGY EFFICIENCY அங்கீகாரம் பெற்ற ஆற்றல் தணிக்கையாளரான திரு. செந்தில்குமார் மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் திரு. சரவணன் ஆகியோர் தொழில் நிறுவன பிரதிநிதிகளுக்கு ஆற்றல் சிக்கனம் குறித்து பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியானது தொடர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.முன்னதாக இப்பயிற்சியில் விருதுநகர் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதுநிலை தலைவர் திரு. பிருந்தாவன்,  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. இராமசுப்பிரமணியன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் (பயிற்சி) திரு. ரவி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் செல்வி. கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மின்சார சேமிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தும் திட்டத்தை (PEACE) 2021 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை செய்து ரூபாய். 42 இலட்சம் அளவில் மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆற்றல் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை களைந்து மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் இயந்திரங்களை நிறுவுபவர்களுக்கு அதற்கான செலவில் 50 சதவீதம் வரை மானியமாக திரும்ப வழங்கப்படும் எனவும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Sep 05, 2024

வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீ சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட கருவூலம் சார்பில், வருமானவரி  பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ச.சுந்தர் அவர்கள் தலைமையில் 03.9.2024 அன்று நடைபெற்றது.ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குதுறை, சென்னை அவர்களின் அறிவுரையின்படி வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வருகிற அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் விருதுநகர் மாவட்ட கருவூல அலகிலுள்ள சார்கருவூலங்களான அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி கீழ் வருகின்ற தமிழ்நாடு அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன்கருதி வருமான வரி பிடித்தம் குறித்த கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில்,  மதுரை சரக வருமான வரி துணை ஆணையர்  திரு. மதுசூதனன், I.R.S., அவர்கள், வருமான வரி அலுவலர் திரு.ஜி.வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு முறையாக வரிப்பிடித்தம் செய்வது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், வரிப்பிடித்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கி கூறினார்கள்.  இக்கூட்டத்தில் உதவி கருவூல அலுவலர்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் 250-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Sep 04, 2024

‘Coffee With Collector” என்ற 102- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (03.09.2024) விருதுநகர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து கடந்த வாரம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திற்கு பார்வையிட சுற்றுலா சென்று வந்த 40 பள்ளி மாணவர்களுடனான ‘Coffee With Collector”   என்ற 102- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கல்வி சுற்றுலா அனுபவம் குறித்து கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 102-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும், மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம்,ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா  சதீஸ்  தவான் விண்வெளி மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 22.08.2024 மற்றும் 23.08.2024 ஆகிய இரண்டு தினங்கள் 40 அரசுப்பள்ளி மாணவர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா  சதீஸ்  தவான் விண்வெளி மையத்தினை பார்வையிட சென்ற வந்த மாணவர்களிடம் சுற்றுலா பற்றிய அனுபவங்களை கேட்டறிந்தார்.விண்வெளி மையத்தில் உள்ள இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் குறித்தும், ஏவுதளம் ஒன்று மற்றும் ஏவு தளம் இரண்டு இரண்டின் சிறப்புகளையும் விளக்கினர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மங்கள்யான், சந்திராயன், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவுதளம் இரண்டிலிருந்து ஏவப்பட்டதை குறித்த விளக்கத்தினையும், அனுபவங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.மேலும், இஸ்ரோவில் வேலைக்கு சேர்வது எப்படி என்றும், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றுவதற்கும், அஸ்ட்ரோநட்டாக பணியாற்றுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள்  அளித்த தெளிவாக பதில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

Sep 04, 2024

2024-25- ஆம் ஆண்டுக்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள்

விளையாட்டு துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உதவித் தொகையாக மாதம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in  மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறது.அ) குறைந்தபட்ச தகுதி-1. சர்வதேச /தேசிய போட்டிகளில் முதலிடம்/ இரண்டாமிடம்/ மூன்றாம் இடங்களில் வெற்றி    பெற்றிருத்தல் வேண்டும். (அல்லது)2.சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.ஆ) தகுதியான விளையாட்டு போட்டிகள்-ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள்.அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள். ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.இ) வயது வரம்பு- 2024-ம் வருடம் 31 ஆகஸ்ட் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.ஈ) மாத வருமானம்-விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-ஆக இருத்தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் /மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை. முதியோருக்கான (Veteran/Masters sports Meet) விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லைஉ) முக்கிய தேதிகள் மற்றும் நேரம்www.sdat.tn.gov.in   இணையதளம் மூலம் விண்ணப்பிக்க துவக்க நாள் -01.09.2024 இவ்வாணய இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் - 30.09.2024 மாலை 6 மணி வரை ஆகும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Sep 04, 2024

பயிர் சாகுபடியில் டி.ஏ.பி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை நெல் 1496 ஹெக்டேர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ளது.  அதுபோல் சிறுதானியங்கள் 329 ஹெக்டேர் பரப்பளவிலும்  பயறு வகை பயிர்கள் 277 ஹெக்டேர் பரப்பளவிலும் எண்ணெய் வித்து பயிர்கள்  662 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 319 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதியஅளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் உள்ளகூட்டுறவு மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களில் யூரியா 3491 டன், டி.ஏ.பி 780 டன்,பொட்டாஷ் 393 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2339 டன் விவசாயிகளின் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மேலும் விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் காம்பளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில்  பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த உரம் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய்வித்து பயிர்களில் டி.ஏ.பி.உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் பொழுது மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கின்றது.  எள், சூரியகாந்தி போன்ற எண்ணெய்வித்து பயிர்களுக்கு சல்பர் சத்து அத்தியாவசியமானதாகும்.        மண்ணில் டி.ஏ.பி. உரமிடும் போது  மண்ணில் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தும் போது குறைவாகவே உப்பு நிலை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதிகப்படியாக டிஏபி உரத்தினை பயன்படுத்துவது மண்ணில் உள்ள ஊட்ட சத்துக்களின் சமநிலையை பாதிக்கிறது. எனவே விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன் பெறலாம். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் 214 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 2334 டன் காம்ப்ளகஸ் உரங்கள்  இருப்பு வைக்கப்பட்டுள்ளது.     மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சனை, இரசீது இல்லாமல் விற்பனை செய்வது, அதிக விலைக்கு விற்பனை செய்வது, பிற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது மற்றும் உரம் பதுக்கல் பற்றிய புகார்களை அந்தந்த பகுதிகளுக்கான வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sep 04, 2024

மூன்றாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாக கொண்ட வண்ணச் சிறுகதைகள், எழுத்தார்வம் மிக்கோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத்திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் “மரமும் மரபும்”  அதாவது சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.இது தொடர்பாக கரிசல் மண்ணின் பண்பாட்டை  மையமாக கொண்ட வண்ணச் சிறுகதைகள் எழுத்தார்வம் மிக்கோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறுகதைகள் குறைந்தது ஐந்து முதல் பத்து பக்கங்களுக்கு எழுதி shortstoriesvnrdt2024@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.குழு நடுவர்கள் மூலம் சிறப்பாக எழுதி அனுப்பப்படும் சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ10,000 ஆறுதல் பரிசு 5 நபர்களுக்கு ரூ5,000 வீதம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். மேலும், தேர்ச்சி பெறும் சிறுகதைகள் 3-ஆவது புத்தகத் திருவிழா மலரில் இடம்பெறும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 04, 2024

மூன்றாவது புத்தகத் திருவிழாவினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. மேற்படி புத்தகக் கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பொதுமக்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.அதன்படி, வரும் 08.09.2024 அன்று கட்டுரைப்போட்டிகளும், வரும் 15.09.2024 அன்று கவிதைப் போட்டிகளும், வரும் 21.09.2024 அன்று புத்தகக்குறிப்பு எழுதுதல் (கரிசல் இலக்கியம் தொடர்பான புத்தகங்கள்)-1 புத்தகம் போட்டிகளும், வரும் 22.09.2024 அன்று புத்தக ஆய்வு (Book Review) என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகளும் அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.பொதுமக்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தவிர அனைவரும் பங்கேற்கலாம். மேற்படி போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை அறிய தொடர்புடைய பொறுப்பு நூலகர்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.போட்டிகள் நடைபெறவுள்ள இடம்                                                           பொறுப்பு நூலகர்அறிவு சார் மையம், அருப்புக்கோட்டை                                         என்.நடராஜன், (9994025279)அரசு பொது நூலகம், சாத்தூர்.                                                              சு.பாலசுப்பிரமணியன் (9751042959)அறிவு சார் மையம், சிவகாசி                                                                     க.அ.மு.ராஜா (9994080713)அறிவு சார் மையம், திருவில்லிபுத்தூர்                                                சோ.மலர்வேந்தன் (9500432396)அறிவு சார் மையம், விருதுநகர்                                                       வி.செந்தில்குமார் (7010991170)அரசு பொது நூலகம், இராஜபாளையம்                                         இல.ராமகிருஷ்ணன் (9487053753)அரசு பொது நூலகம், வத்திராயிருப்பு                                             சி.வெள்ளைச்சாமி (9952243318)அரசு பொது நூலகம், வெம்பக்கோட்டை                                       ஸ்.லெனின் (9789688869)அரசு பொது நூலகம், திருச்சுழி                                                       சு.பாஸ்கரன் (9944253609)அரசு பொது நூலகம், நரிக்குடி                                                         ஜி.ராஜா(9865769118)அரசு பொது நூலகம், காரியாபட்டி                                               பி.சுரேஷ்கண்ணன் (9786112369)

1 2 ... 15 16 17 18 19 20 21 ... 69 70

AD's



More News