25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


நடப்போம் நலம் பெறுவோம் 2.0
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நடப்போம் நலம் பெறுவோம் 2.0" - 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk)   திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடைபாதையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்(13.03.2026) திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில், "நடப்போம் நலம் பெறுவோம் 2.0" - 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk) திட்டத்தினை  தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், சாத்தூரில்  மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடைபாதையை திறந்து வைத்து நடைப்பயிற்சி  மேற்கொண்டார்.

 உலக சுகாதார அமைப்பு தரவுகளின்படி உடற்பயிற்சி செய்வது என்பது நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் என்பது 28 சதவிகிதம் குறைக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதய நோய் என்பது 30 சதவிகிதம் வரை குறைக்கிறது என்கின்ற தகவலும்  நிலைப்படுத்தப்பட்டுள்ளது.எனவே மக்கள் தினந்தோரும் நடைப்பயிற்சி என்பது மிக சிறந்த வகையில் உடலை பேணிக்காக்கும் அடையாளம் என்று கருதப்படுகிறது.இத்திட்டத்தை கடந்த 2023 நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர்  அவர்கள்    38 மாவட்டங்களிலும் இத்திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற திட்டம், நடப்பதை ஊக்குவிப்பதற்கும், நடக்க வேண்டும் என்பதை கடந்து பங்கேற்பவர்கள் தொற்றா நோய் பாதிப்புகளை தெரிந்து கொள்வதற்கும் மிக பெரிய உதவியாக இருந்தது.

 எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 ஆவது  முறையாக 38 மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை   தொடங்க வேண்டும் என்ற உத்தரவின்படி,  (13.03.2026) நடப்போம் நலம் பெறுவோம் 2.0 திட்டம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் (13.03.2026) மாவட்ட ஆட்சியர்அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நடைபாதையை திறந்து வைத்து, நடைப்பயிற்சி மேற்கொண்டார்.பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை மையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டார்.

 இந்த நடைபாதை, சாத்தூர் ரயில்வே கேட் சாலையில்  துவங்கி ஆட்டுப்பண்ணை வரை சென்று திரும்பும் வகையில்   அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ஜெகவீரபாண்டியன் குணசேகரன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.குருசாமி, இருக்கண்குடி காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சாத்தூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என சுமார் 500 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News