25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் - 2026 , 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் - 2026 , 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு கிராமத்தில் (15.03.2026), எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S ., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, வாக்காளர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று நடைபெற்ற இப்பேரணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை வழங்கிப் பேசினார்.

  இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்."வாக்களிப்பது நமது உரிமை", "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்" மற்றும் "ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், "வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களித்துத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். நேர்மையான, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News