25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் (15.03.2026)  இந்திய தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன்,த.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் 72 மணி நேரத்திற்குள் அமுல்படுத்தப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், அரசு வளாகம், கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும். பொது வளாகம் / கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலகங்கள், மின்கம்பங்கள் உள்ளாட்சிக்குட்பட்ட கட்டிடங்கள் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.

 தனியார் வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க /அகற்றப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, அனைத்து அரசு வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் செலவில் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.பொது வளாகம் / கட்டிடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலகங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சிகளுக்குட்பட்ட கட்டிடங்கள் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையினரால் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.      தனியார் வளாகம் / கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க / அகற்றப்பட வேண்டும்.

அனைத்து அரசு அலுவலங்களிலும் கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைத்தல் / அகற்றுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட சட்மன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினர், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்காணும் அறிவுரைகளின்படி, தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையத்தின் உரிய காலக்கெடுவிற்குள் பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி,  சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S .,  உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *