காவல்துறையில் “Orderly System” நடைமுறையில் இருப்பதாக யாரிடமாவது தகவல் இருந்தாலோ அல்லது அதுகுறித்து புகார் அளிக்க விரும்பினாலோ, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் மாவட்ட அளவிலான குழுவிற்கு புகார் அளிக்கலாம்.
அரசு வெளியிட்ட G.O.(Ms) No.29, Home (Police–VI) Department, நாள் 21.01.2026 மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில், காவல்துறையில் நடைமுறையில் இருந்த “Orderly System” (ஆர்டர்லி முறை) முறையை முழுமையாக ஒழிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.மேற்கண்ட உத்தரவுகளை செயல்படுத்தும் பொருட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து, அதன் நடைமுறையை உறுதிசெய்யும்.
எனவே, காவல்துறையில் “Orderly System” நடைமுறையில் இருப்பதாக யாரிடமாவது தகவல் இருந்தாலோ அல்லது அதுகுறித்து புகார் அளிக்க விரும்பினாலோ, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் மாவட்ட அளவிலான குழுவிற்கு புகார் அளிக்கலாம்.
புகார்கள் அளிக்கும் வழிமுறைகள்:
தொலைபேசி மூலம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி எண்.1077)
மின்னஞ்சல் மூலம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.(மின்னஞ்சல் முகவரி. collrvnr@nic.in)
எழுத்து மனு மூலம்:
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கலாம்.
புகார்கள் அளிக்கும் போது, நிகழ்ந்த இடம், தொடர்புடைய நபர்கள் மற்றும் புகாரின் தன்மை போன்ற விவரங்களை தெரிந்தவரையில் குறிப்பிடலாம்.
புகார்கள் எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அளிக்கலாம்.
பெறப்படும் அனைத்து புகார்களும் மாவட்ட அளவிலான குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உட்பட தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
புகார் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும். காவல்துறையில் “Orderly System” முறையை முழுமையாக ஒழிக்க பொதுமக்கள் முன்வந்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply