25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அபிஷேக் சர்மா  சிக்சர் மழையில் இந்திய அணி வெற்றி. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அபிஷேக் சர்மா  சிக்சர் மழையில் இந்திய அணி வெற்றி. 

 இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதின.இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணி யில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் முகமது ஷமி இடம் பெற்றார்.'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'பவுலிங்' தேர்வு செய்தார். அபிஷேக் ஆட்டம் ஆரம்பமானது. இவரது சிக்சர் மழையில் வான்கடே மைதானம் அதிர்ந்தது. ஓவர்டன் ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசிய இவர், 17 பந்தில் அரைசதம் எட்டினார். 

அபிஷேக் சர்மா, தொடர்ந்து சிக்சர், பவுண்டரி விளாச, இந்திய அணி 16 ஓவரில் 202/6 ரன்னை எட்டியது.ரஷித் 'சுழலில்' அபிஷேக் (54 பந்தில் 135 ரன், 7 பவுண்டரி, 13 சிக்சர்) அவுட்டானார். இவரது ஆட் டத்தை பயிற்சியாளர் காம்பிர், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் டுக்கு 247 ரன் எடுத்தது. இந்திய பந்து வீச்சில் இங்கிலாந்து அணி பில் சால்ட் மட்டும் 55 ரன் எடுத்தார். 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு தோல்வி அடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News