25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம் நிறைந்த காலிபிளவர் ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆரோக்கியம் நிறைந்த காலிபிளவர் ...

நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் காலிபிளவர் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியம் நிறைந்ததுமாகும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.காலிபிளவர் பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கிறது. ஒரு சில இடங்களில் இந்த காயானது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வகை காலிஃப்ளவரும் அதற்கென்று தனித்துவமான பயன்களைக் கொண்டிருக்கின்றன.

காலிபிளவரில் உள்ள அதிகப்படியான நார்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றன.

வைட்டமின் சி மற்றும் கே நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெறவும் இது உதவுகிறது. செரிமான மேம்பாடு, உடல் எடை குறைப்பு, புற்றுநோய் எதிர்ப்பு உணவுகள், வைட்டமின் சி சத்து,குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறி என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை தாராளமாக உட்கொள்ளலாம். 

இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள'சல்பராபேன்' என்ற சத்து ரத்த அழுத்தத்தை குறைத்து இதய தமனிகளை பாதுகாக்கிறது. மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் தேவையான'கோலின்' சத்து இதில் ஏராளமாக உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News