இங்கிலாந்து அணி, பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-16' போட்டியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசிலுக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தை 80,663 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
மற்றொரு 'ரவுண்டு-16' போட்டி மெக்சிகோவின் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி, மெக்சிகோவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் பாதி முடிவில் 2-1 என முன்னிலை வகித்த இங்கிலாந்து, கடைசி வரை அந்த முன்னிலையை தக்கவைத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த போட்டியை 80,824 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
காலிறுதியில் இங்கிலாந்து அணி, ஜூலை 11-ம் தேதி மயாமியில் நடைபெறும் ஆட்டத்தில் நார்வேயை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply