25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


கட்டுப்படியாகாத ஸ்டார்லிங்க் கட்டணம்..! 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கட்டுப்படியாகாத ஸ்டார்லிங்க் கட்டணம்..! 

ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவைக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, "எங்களுக்கு ஜியோ, ஏர்டெல் சேவை போதும்" என்று பலர் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டார்லிங்க் சேவை பெற வேண்டுமானால் அதற்கான டிவைஸ் வாங்க வேண்டும் என்றும், அதன் விலை 33 ஆயிரம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், இதுதான் குறைந்த விலை என்றும் கூறப்படுகிறது. 

 ஏற்கனவே ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் எந்த விதமான டிவைஸ் கட்டணமும் பெறாமல் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற கட்டணத்தை வைத்திருக்கும் நிலையில், 33 ஆயிரம் ரூபாய் டிவைஸ் மற்றும் 3000 ரூபாய் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்பது நமக்கு கட்டுப்படியாகாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புத் துறையின் கடும் போட்டிக்கு இடையே இவ்வளவு பெரிய கட்டணத்துடன் அறிமுகமாகும் ஸ்டார்லிங்க், பொதுமக்களின் ஆதரவைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News