கொள்ளு ரசம்.
தேவையான பொருட்கள் - 11/2cupகொள்ளு வேக வைத்த தண்ணி,1 சிறிய எலுமிச்சம் பழ அளவு புளி,1/2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி சீரகம், மிளகு, கடுகு , 5 பல் பூண்டு, சிறிதளவு பெருங்காயம்,தேவையான அளவு உப்பு ,ஒரு பிடி கருவேப்பிலை,1பிடி(கொத்தமல்லி தழை.
செய்முறை – வரக்கொத்தமல்லி சீரகம், மிளகு, பூண்டு ஒரு வரமிளகாய், மஞ்சள் தூள் உப்பு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.கொள்ளு வேகவைத்து அதிலிருந்து அந்த தண்ணியை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும் .அந்த தண்ணீரில் நாம் அரைத்ததை எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும்.புளித் தண்ணியை நன்றாக கரைத்து இதில் சேர்த்து விடவும்.
மேலே கருவேப்பிலை கொத்தமல்லித்தழை அனைத்தையும் போட்டு வைத்துக் கொள்ளவும்.வானொலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் தாளித்து இந்த தண்ணீரில் ஊற்றி கொதிக்க விட வேண்டாம். நுரை கட்டி உடன் இறக்கி வைத்து விடுவோம் கொள்ளு ரசம் உடம்புக்கு ரொம்ப நல்லது மிகவும் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply