தலைமுடிக்கும், சருமத்துக்கும் ஆரஞ்சு பழத்தோல், பவுடர்
ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் வழி வகுக்கும்.பல்வலியால் அவதிப்படுபவர்கள், ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் வலி குறையும்.. தலைமுடி உதிர்வது அதிகமாக இருந்தால், தினம்1 ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வரலாம். முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் இது வழி வகுக்கக் செய்யும்.குளிர்காலத்தில் மந்தமான சருமம், வறண்ட கூந்தல் இப்படியான பிரச்சனைகள் இருந்தாலும், ஆரஞ்சு பழமே நமக்கு பயன்படுகிறது. நம்முடைய சருமத்துக்கு கவசம் போல ஆரஞ்சு தோல் உதவுகிறது ஆரஞ்சு தோல் பவுடரை, சருமத்துக்கு பேக் போல போடுவார்கள். இதனால், இறந்த செல்களை நீக்கி, சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் திகழும். பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும் சரி, சருமத்தில் சுருக்கம் இருந்தாலும் சரி, எண்ணெய் பசை இருந்தாலும்சரி, மொத்தத்துக்கும் இந்த ஆரஞ்சு தோல் பவுடர்தான் மருந்தாகிறது. எனவே, ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்தும் வரலாம். அல்லது இந்த பொடியில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்தும் வரலாம்.
0
Leave a Reply