வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.11.2024) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 முன்னிட்டு, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் முன்னிலையில், விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு. ஹனிஸ் சாப்ரா,I A S., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளில் அரசியல் கட்சிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வில்லிபத்திரி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் வீட்டிற்குச் சென்று 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் அட்டை பெற்றுவிட்டனரா என்பது குறித்து விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா. ராஜேந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. வள்ளிக்கண்ணு, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கீகிரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply