பேச்சுவார்த்தையின் பலனாக ₹28,650 கோடி சொத்துக்கள் விடுவிப்பு.
மறுபுறம், அமெரிக்கா மற்றும் கத்தார் தூதுக்குழுக்கள் மேற்கொண்ட ரகசிய பேச்சுவார்த்தையின் விளைவாக, அமெரிக்காவால் முடக்கப்பட்டிருந்த ஈரானின் 3 பில்லியன் டாலர் (சுமார் ₹28,650 கோடி) மதிப்புள்ள சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய வான்வெளி கட்டுப்பாடுகளையும் மீறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருந்து பிரத்யேக விமானம் மூலம் இந்த ரொக்கப் பணம் டெஹ்ரானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளும் என்ற அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
0
Leave a Reply