25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


மிளகு - மல்லி ரசம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மிளகு - மல்லி ரசம்

தேவையான பொருட்கள் : மிளகு - 2 டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன், ரெடிமேட் ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தக்காளி - ஒன்று, புளி - சிறிதளவு, வெல்லம் அல்லது சர்க்கரை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 2, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர்விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும். கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக் கிய தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிவந்தவுடன் இறக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும். ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடிவிட்டால், ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News