“இளம் பேரிடர் நண்பன்” – பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்கப்படவுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.07.2026) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற “இளம் பேரிடர் நண்பன்”- (Yuva Aapda Mitra Volunteers Training) பயிற்சி பெற்ற 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்ற பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் பார்வையிட்டார்.
இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது அரசின் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாக, உயிர்ச்சேதத்தைக் குறைக்கவும், துரிதமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், “இளம் பேரிடர் நண்பன்” என்ற தலைப்பில் என்.சி.சி (NCC), என்.எஸ்.எஸ் (NSS), மை பாரத் (My Bharath) தன்னார்வலர்களுக்கு ஒரு வார காலம் உறைவிட பயிற்சி விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 01.07.2026 முதல் 07.07.2026 வரை நடைபெற்று வருகிறது.
விருதுநகரில் 200 தன்னார்வலர்கள் மற்றும் சிவகாசியில் 155 தன்னார்வலர்கள் என மொத்தம் 355 தன்னார்வலர்களுக்கு வழங்குவதற்காக தலா ரூ.8,500/-வீதம் மொத்தம் ரூ.30.17 இலட்சம் மதிப்பில் 16-வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படவுள்ளது.
இந்த பாதுகாப்பு உபகரணங்களில் தனிநபர் மிதக்கும் சாதனம் (பாலியூரிதேன் நுரையால் செய்யப்பட்ட உயிர் காப்பு அங்கி) (Personal Floatation Device (Life Jacket made of Polyurethane foam), 2 டார்ச் அல்லது அவசரகால விளக்கு (சூரிய சக்தியில் இயங்குவது) (Torch or emergency light (solar enabled), பாதுகாப்புக் கையுறைகள் (Safety Gloves (Leather), Pocket Knife, முதலுதவிப் பெட்டி (காயக்கட்டுத் துணிகள், பஞ்சு, கிருமிநாசினி களிம்புகள், கத்தரிக்கோல், இடுக்கி, கையுறைகள், சிபிஆர் முகமூடிகள், பிளவுக்கட்டுகள், இரத்தப்போக்கை நிறுத்தும் கட்டுகள்) First Aid kit (Bandages, cotton, antiseptic creams, scissors, tweezers, gloves, CPR masks, splints, tourniquets)), எரிவாயு பற்றவைப்பான் (Gas Lighter), விசில் (Whistle), தண்ணீர் புட்டி (Water Bottle), முதுகுப்பை மற்றும் கொசுவலை (Rucksack and Mosquito net Red colour uniform Dress with NDMA logo backside and SDMA logo front she and tracksuit (2 set)) (பின்புறத்தில் NDMA சின்னமும், முன்புறத்தில் SDMA சின்னமும் கொண்ட சிவப்பு நிற சீருடை மற்றும் டிராக்சூட் (2 செட்)), நீர் புகாத உடை / மழை அங்கி (Water Resistant Clothing / Rain coat), கம் பூட்ஸ் (Gum Boots), பாதுகாப்புக் கண்ணாடிகள் (Safety Goggles), பாதுகாப்புத் தலைக்கவசம் (நீர் புகாதது) ராஃப்டிங்) (Safety Helmet (Water Rafting)), தூசி எதிர்ப்பு முகக்கவசம் (Dust Resistant Mask), பிரதிபலிப்பு ஜாக்கெட்(Reflective Jacket) உள்ளிட்ட 16 தொகுப்புகள் உள்ளன. இதன் மூலம் இயற்கை இடர்பாடு காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மைத்துறை) திரு.சோனையன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply